.

Pages

Thursday, March 26, 2015

உழைப்பிற்கு வயதில்லை! முதுமைக்கு பயமில்லை ! 88 வயதில் பெயர் பொறிக்கும் தொழிலில் பெரியவர்

இளம் வயதினருக்கே மிகவும் சிரமமான செயலான‌ உளியால் கற்களை செதுக்கி பெயர் பொறிக்கும் பணியில் 88 வயது பெரியவரான 'இளைஞர்' ஈடுபட்டு வருகிறார். மிகவும் துல்லியமாக செயலாற்றக்கூடிய இப்பணியில் சிறிது கவனம் சிதறினாலும் பாதிப்பு ஏற்படும் இத்தொழிலில் வெற்றிகரமாக செயல்பட்டு உழைப்பிற்கு வயதில்லை என நிருபித்து உழைப்பே சிறப்பு என இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நயினார் தெருவை சேர்ந்த பெரியவர் ரபி முஹம்மது மெய்தீன் ஹாஜியார். புதிதாக வீடு, பள்ளிவாசல், பள்ளிக்கூடம் போன்ற கட்டிடங்களுக்கு இவர் இப்பணியை செய்து தருகிறார்.

அதிகாலையிலேயே வந்து தமது பணியைத் தொடங்கும் வயது 88 வயது இளைஞர் முதலில் என்னவெல்லாம் எழுதவேண்டும் என கேட்டு அதற்கு எவ்வளவு கட்டணம் என்பதை நிர்ணயிப்பார் பின்னர் வாக்குத் தவறாமல் வந்து வேலையைத் திறம்பட முடித்துத் தருவார். இந்த வயதிலும் கண்ணுக்கு கண்ணாடி அணிவதில்லை. எழுத வேண்டியதை அழகாக எழுதி முடித்தபின் எழுத்துக் களை வெட்டும்போது மட்டும் துகள்கள் கண்ணில் தெறிக்காமல் பாதுகாக்க ஒரு கண்ணாடி அணிகிறார். அதிகாலையிலிருந்து உச்சிவேளை வரை மட்டுமே பணியாற்றுகிறார்.

தன்னந்தனியாக கோக்காலி அல்லது ஏணி மீது நின்றவண்ணம் அல்லது அமர்ந்த வண்ணம் வேறுயாரின் துணையுமின்றி பணியாற்றுவதே இவரின் சிறப்பாகும். முதுமை வந்து விட்டதே நாம் எப்படி உழைக்க முடியும் என்று கவலையில் உழல்பவர்களுக்கு மத்தியில் முதுமைக்கு அஞ்ச தேவையில்லை உழைப்பிற்கு வயதில்லை முயன்றால் முடியாது இல்லை மனம் இருந்தால் சொந்த காலில் நிற்கலாம் என்று இந்த பெரியவர் உணர்த்துகிறார்.

நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.