.

Pages

Saturday, March 28, 2015

அமீரகத்தில் அதிரை கிரிக்கெட் அணியினர் கோப்பையை வென்று சாதனை!

இவ்வாண்டு முதல் முறையாக AUTO TRADERS TOURNAMENT-2015 நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட இரண்டு மாதங்களாக நடைபெற்றது, நமதூரை சுற்றியுள்ள மதுக்கூர், முத்துப்பேட்டை போன்ற அணிகள் பங்கு பெற்றனர், நமதூர் ABCC அணிகள் இரண்டு (A மற்றும் B) அணிகளாக இவ்வாண்டு களம் இறங்கினர். இதில் ABCC - B அணியினர் காலிறுதி வரை வந்து மதுக்கூர் அணியிடன் மோதி தோற்று வெளியெறினர்

அரையுறுதியுல் மதுக்கூர் அனியை எதிர்கொண்ட நமதூர் அணி (ABCC - A) வெகு சிறப்பாக விளையாடிய சலீம் (131*) மற்றும் அப்துல் ஃபத்தாஹ் (99) ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தார்கள். இந்த ஜோடி 230ரன்கள் சேர்த்து ஹிமாலய சாதனை படைத்தது இதன் மூலம் இறுதிப்போட்டியில் வெகு சுலபமாக நுழைய காரணமாக அமைந்தது.
இன்று நடைபெற்ற AUTO TRADERS கோப்பை 2015, உம் அல் குய்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ABCC அதிரை அணியினரும் இந்தத்தொடரில் எப்போட்டியுலும் தோல்வியை தழுவாத பலமிகுந்த அணியான இப்போட்டிகளை நடத்தும் AUTO TRADERS அணியினரும் இறுதி ஆட்டமாக ஆடினர்.

AUTO TRADERS அணியினர் டாஸ் வென்று முதலில் மட்டைப்பணியை தேர்வு செய்தனர் நமதூரை சேர்ந்த யாசீனின் அதிரடியில் ரன் மின்னல் வேகத்தில் எகிறியது. 

ஒரு கட்டத்தில் AUTO TRADERS அணி 92/4 - 10ஒவர் என்ற நிலையில் இருந்தது அதிரை ABCC அணியின் கூல் கேப்டன் ரியாஸ் தனது யூக்தியை கடைப்பிடித்தார் அதில் தினறிய AUTO TRADERS அணி அடுத்த எட்டு ஒவரில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து வெறும் 27ரன்கள் மட்டுமே எடுத்தது, இதில் மிக சிறப்பாக பந்து வீசிய சபீர் மூன்று விக்கெடுகளை கைப்பற்றினார்.

ABCC அதிரை அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடக்க மட்டையாளர்களாக களம் இறங்கிய நிஜாஸ், சலீம் இருவரின் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் சில சமயத்தில் அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப்ப ரன்களில் வெளியேறினர் அதன் பிறகு களம் இறங்கிய ஃபத்தாஹ் மற்றும் தமீமின் நிதானமான ஆட்டத்தினால் அணியின் வெற்றியிழக்கு சுலமாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
மூன்று முறை இறுதிப்போட்டியில் நுழைந்த நமது அணி இப்போட்டியில் தான் கோப்பையையும் முதல் பரிசுக்கான தொகை AED 2000/- பரிசை தட்டிச்சென்றது.

இப்போட்டியினை கான்பதற்க்கு நமதூரை சேர்ந்த ஏராளமானோர் கிட்டதட்ட 50 பேர் கலந்து நமது அணியினரை தொடர்ந்து உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
வந்திருந்த அனைத்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் ABCC அதிரை அணி நிர்வாகம்.

அதிரைக்கு பெருமை சேர்த்த நமதூர் அணியை பாராட்டுவதுடன் வாழ்த்துவோம்! 

அதிரை தென்றல் (Irfan)

2 comments:

  1. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.