நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன். இவர் நேற்று குளச்சலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு ஈசிஆர் சாலையில் நேற்று நள்ளிரவு நாகப்பட்டினம் திரும்பினார். வாகனத்தில் தனது நண்பர் மற்றும் ஓட்டுனர் ஆகிய இருவரும் பயணித்தனர்.
வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அதிரை ஈசிஆர் சாலை கருங்குளம் பாலம் அருகே சென்ற போது சாலையோர எல்லை கல்லில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
தகவலறிந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர், பி.எஃப்.ஐ டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாமுதீன், எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு அவர்களுக்கு வேண்டிய உதவியை உடனிருந்து செய்து கொடுத்தனர். இதையடுத்து ஜேசிபி வாகனம் உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை மீட்டு சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.