.

Pages

Wednesday, March 18, 2015

கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ் இயக்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு !

கூட்ட நெரிசலை தவிர்க்க அதிரையிலிருந்து பேராவூரணிக்கு கூடுதல் பஸ் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரையிலிருந்து ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட கடலோரப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர் அதிரை மற்றும் பேராவூரணி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். மல்லிபட்டினம் அடுத்து காணப்படும் மனோரா சுற்றுலா தளத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் பேராவூரணி மார்கெட்டுக்கு சென்று வருகின்றனர்.

தினமும் அதிரையிலிருந்து பேராவூரணி சென்று வர ஒரே ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் கூடுதலான பயணிகள் ஏறி வருவதால் எந்நேரமும் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக பள்ளி கல்லூரி நேரங்களில் கூட்ட நெரிசலாக இருக்கும். இதனால் பஸ்களில் இடமில்லாததால் மாணவர்களும், இளைஞர்களும் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். எனவே அதிரையிலிருந்து பேராவூரணிக்கு கூடுதலாக மற்றொரு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.