.

Pages

Monday, March 23, 2015

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக முகைதீன் பிச்சை நியமனம் !

முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் மு.முகைதீன் பிச்சை. இவர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் பரிந்துறையின் பேரில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக மு.முகைதீன் பிச்சையை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் நியமனம் செய்தார்.

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியில் முகைதீன் பிச்சையை அறிமுகம் செய்து வைத்து அமெரிக்கை.நாராயணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்பொழுது திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனை அடுத்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமணம் செய்யப்பட்ட மு.முகைதீன் பிச்சைக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.