.

Pages

Tuesday, March 17, 2015

என்னப்பா ... சொல்றே... நம்மூரில்லா?

"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" பாடிவிட்டு சென்றான் ஆனால் திருட்டை விட மாட்டேன்றானுங்க அதற்கு முழு காரணம் வேலையின்மையா?... அல்லது தாறுமாறான விலைவாசியின் ஏற்றமா?.. எதுவாக இருந்தாலும் அடுத்தவனின் பொருட்களை எடுப்பது குற்றமில்லையா? அச்செயல் செய்யும் பொழுது மனதில் தோன்றவில்லையா இது பாவமென்று...திருடுபவனும் சரி மற்றும் இன்னும் பிற தீச்செயல் செய்தாலும் சரி.. கைதானவன் சட்டத்தின் எந்த ஓட்டை வழியாக வெளியில் வந்துவிடலாம் என்று தைரியமாக ஊளாவிக்கொண்டு இருக்கிறார்கள். 

திருட்டைபற்றி புலம்பித்தள்ளுகிறேன் என்று நினைக்கிறீர்களா?...ஆம் ஒர் சம்பவம் நமதூ
ரில் நடந்தெரியது சிஎம்பி லைன் மட்டுமில்லா அனைத்து தெருக்களிலும் ஒரு சில வீடுகளில் பூட்டியும் ஆண்கள் அல்லாத வீட்டையும் தான் தற்பொழுது நோட்டமிட்டு தன் திருட்டுக்கைவரிசையை காண்பிக்கிறார்கள். 

அனேக தெருக்களில் இரவு நேரத்தில் ஏன் மதியம் பட்டப்பகலில் கூட ஆட்களின் நடமாட்டம் தென்படுவதில்லை. இரவு நேரத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள யாருமில்லை வீட்டில் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருஹ்க்கும் தன் கணவருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு பாதுகாப்பை தேடும் அவல நிலை பல வீட்டில் நடந்து வருகின்றது.

* வெளிமாநிலத்தில் இருந்து கட்டுமான பணி செய்யும் ஊழியர்களை கண்கானிக்க வேண்டும்.

* தங்களது பகுதியில் உள்ள குடியிருப்பு நல சங்கங்களின் வாயிலாக தனியார் பாதுகாவலர்களை பயன்படுத்தி கொள்ளவும்.

* சந்தேக நபர்களை அடையாளம் காணும் வகையில் தங்கள் பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்திட வேண்டும்.

* குடியிருப்புவாசிகள் சந்தேகப்படும் படியான நபர்கள் எவரேனும் சுற்றித்திரிந்தால், உதாரணமாக ஸ்டவ் ரிப்பேர் செய்பவர், பெட்சீட் தலையணை விற்பவர் போன்ற தோற்றங்களில் சுற்றித்திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* பொதுமக்கள் தங்களது பகுதியில் கவனிப்பாரற்று அல்லது கேட்பாரற்று சந்தேகப்படும் படியாக கிடக்கும் வாகனங்கள் பற்றி உடனே காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்பகுதியில் குறைந்த ஒளி அளவு பல்பு களை எரியவிட வேண்டும். வீட்டினை இருட்டாக வைக்கக் கூடாது.

* பொதுமக்கள் தங்களது பகுதியில் குற்றச்செய்கையினை தடுப்பதற்கு உதவிடும் வகையில் தகுந்த தகவல் களை காவல் கட்டுப்பாட்டறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

-பொதுநலன் கருதி வெளியுடும்.

அதிரை தென்றல் (Irfan)

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்தக் கருத்தை மையமாக வைத்து ஏற்கனவே பல வகைகளில் பல பதிவுகள் வந்திருந்தும், பொது மக்களை திருந்தாத வரை திருட்டு ஒழியாது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். ஒரு பெண் நபர் கை பேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு Samsung ஸ்மார்ட் போன் மற்றும் 3Gm தங்க காசு பரிசு கிடைத்து உள்ளது 3500 ருபாய் service பணத்தை தபால் நிலையத்தில் கட்டி பெற்றுக்கொள்ளவும். அடுத்த நாள் தபால் நிலையத்தில் இருந்து போன் வர 3500 ருபாய் கட்டி பெற்றுக்கொள்ளவும் என்று. இந்த நபர் தபால் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரிக்க உண்மை தான் உங்களுக்கு parcel இருக்கிறது பணத்தை கட்டி பெற்று கொள்ளவும் என்று சொல்ல.அனுப்புனர் முகவரி என்ன என்று கேட்க NEW DELHI என்று மட்டும் தான் உள்ளது உங்களை போல் பல நபருக்கு வருது யாரும் கேள்வி கேட்காமல் வாங்கி செல்கிறார்கள். இந்த நபர் கேட்ட ஒரு கேள்வி என் பனத்தை வாங்கி எந்த முகவரிக்கு அனுப்பி வைப்பீர்கள். உஷார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.