.

Pages

Sunday, March 22, 2015

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நடைபெற்ற முதியோர் சிறப்பு மருத்துவ முகாம் !

அதிரையில் வாழும் முதியோர்களை மாதமொருமுறை ஒருங்கிணைக்கவும், இவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவியை வழங்கவும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக நமதூர் செக்கடி பள்ளியில் கலந்தாலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து அதிரையில் வாழும் முதியோர்களை இனங்கான வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரை ஷிஃபா மருத்துவமனையில் முதியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் தஞ்சை பிரபல மருத்துவர் வாஞ்சிலிங்கம் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஷிஃபா மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவ செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோர் முதியோருக்கு தேவையான பணிவிடை செய்தனர்.

தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் முதியோர்கள் முகாமிற்கு ஏற்றி வரப்பட்டனர். அதே போல் பத்திரமாக அவரவர் வீட்டிற்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் முடியும் வரை தமுமுக ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள் பலர் முகாமிற்கு வருகை தந்தனர். முகாமை ஏற்பாடு செய்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர்கள், அதிரை ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.

முகாமில் கலந்துகொண்ட அனைத்து பயனாளிகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிரையில் வாழும் ஏராளமான முதியோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இன்று காலையில் துவங்கிய முகாம் மாலை வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
 
 
 
 
 
களத்திலிருந்து 'மணிச்சுடர்' சாகுல் ஹமீது

4 comments:

  1. பெற்றவுடன் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்து அதை அந்நிய தேச கனவுகளுடன் பணத்திற்காக படிக்கவைக்கும் இன்றைய பெற்றோர்களே தயவு செய்து பணத்தை சம்பாதிக்கும் கனவுடன் முதுமையை பேணி பாது காக்கும் எண்ணத்தையும் இன்றே விதையுங்கள். நம் இந்திய தேசத்தில் தான் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அதுபோல முதுமைக்கும் முதியோருக்கும் முக்கியத்துவம் கொடுதொமேயானால் வீட்டிலும், நாட்டிலும் அன்பு பெருக்கெடுத்து ஓடும். பெத்த மனச பரிதவிக்க விடலாமா?

    புதிய புதிய மருத்துவர்களை நம்மவூருக்கு அறிமுக படுத்திய நாம் இன்று முதியோர்களை ஒருவருக்கு ஒருவர் தன் அன்பை , மறவா நினைவுகள் பகிர்ந்துக்கொள்ள ஓர் அரியவாய்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாலர்கல்க்கும், தமுமுக தொண்டு சேவைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வரவேற்க்கப் படவேண்டியவை. முதியோர்களுக்கும் இளமையில் பழகிமறந்த பால்ய சிநேகிதர்களை கூட இந்த முதுமையில் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும்.

    இந்த சந்திப்பு முகாம் தொய்வின்றி தொடரவேண்டும்.
    நல்லவிசயங்களை அனைவரும் வரவேற்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்று முதியோர்களை ஒருவருக்கு ஒருவர் தன் அன்பை மறவா நினைவுகள் பகிர்ந்துக்கொள்ள ஓர் அரியவாய்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாலர்கல்க்கும், தமுமுக சேவைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.