.

Pages

Tuesday, March 31, 2015

கந்தூரி ஆதரவாளர்களை மீட்டெடுக்க அதிரை சாகுல் அழைப்பு ! [ காணொளி இணைப்பு ]

அதிரையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி மற்றும் கடற்கரைதெரு தர்ஹாக்களில் வருடந்தோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இவற்றை அதிரையில் வாழுகின்ற ஒரு சாரார் ஆதரிப்பதும் மற்றொரு சாரார் கடுமையாக எதிர்த்து வருவதுமாக இருந்துவரும். இதுதொடர்பாக அதிரையில் வாழுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ அல்லது பொதுமக்களிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.

கடந்த சில வருடங்களாக ஊரில் நடக்கும் கந்தூரி விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இயங்கிவரும் தவ்ஹீத் அமைப்புகள் அவ்வப்போது துண்டு பிரசுரங்களும், தெருமுனை பிராசாரங்களும், பொதுக்கூட்டங்கள், கந்தூரி விழாவிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டைகளும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குதல், கந்தூரி விழாவின்போது விநியோகிக்கும் மின்சாரத்தை தடை ஏற்படுத்தாமல் இருக்க மின்சார வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட தங்கள் தரப்பு எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் காட்டுப்பள்ளி கந்தூரி விழா நடைபெற இருக்கிறது. கந்தூரியை பகிரங்கமாக ஆதரிக்கும் ஆதரவாளர்களை மீட்டெடுக்க உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் அன்பர்களின் ஒத்துழைப்பை கோருகிறார் அதிரை சாகுல். இதுதொடர்பாக அதிரை சாகுல் நமக்கு அளித்த காணொளி விளக்கம்.

மேலும் கந்தூரி எதிர்ப்பாளர் - ஆதரவாளர் கந்தூரி தொடர்பாக மேலதிக விவரங்கள் - விளக்கங்கள் பெற விரும்புவோர் நம்மை ( அதிரை சாகுல் ) அலைப்பேசியில் 0091 9894973416 தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என தெரிவித்துள்ளார்.

16 comments:

  1. 5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

    வேண்டுகிறோம்.வேண்டாமே
    அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று போடலாமே

    வேண்டுகிறோம்.என்பது அல்லாஹுவிடம் மட்டுமே

    ReplyDelete
  2. தர்காவின் எதிர்ப்புறமிருக்கும் மின்சாரக் கலையரங்கில் இன்று இரவு .....அப்படின்னு விளம்பரம் பண்ணின காலம்போச்சு.அதே போல வழிபாடும் மாறிப்போச்சு ஏதோ வருடத்தின் நினைவாக ஒரு நிகழ்ச்சி வைத்து விழாவை முடித்து விடுகிறார்கள்.

    அப்போ கந்துரிவிலாவில் பார்த்ததை விட இப்போ Whatsup -ல் அதிகமாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் - இயக்கம் இருப்பதற்காக கலக்டரை பார்த்து மனுகொடுக்கிரார்கள் அவ்வளவு தான். மக்களுடைய வாழ்வாதார பிரச்சனையில் அக்கறை உண்டா என்றால் இல்லை என சொல்ல தோணும்.
    எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அரசியலில் எதிர்க்கட்சி எதிர்ப்பது வழக்கம் போல இவர்கள் எதிர்த்துக்கொண்டிருப்பார்கள் இருப்பார்கள் - நடப்பது நடந்து கொண்டிருக்கும் உலகம் உள்ளவரையில்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Aaman natdel than makkalai
    meetkka nam berathamar ponar
    kanthure makkalai meetkka
    etu veanna kalavara boomeya?
    haaaaaaa,,,,,heeeeee...heeee.

    ReplyDelete
  5. சாகுல் பாய் இதுக்கு போய் அலட்டிக் கொள்ளலாமா? கந்தூரிக்கு நான் ஆதரவு தருகின்றேன். நாகூர் கந்தூரிக்கு போயிருந்தேன், அடேங்கப்பா எத்தனை கூடு! பசங்களுடைய ஆட்டம், பட்டையை கிளப்பிட்டாங்க. அமைப்புகளில் உள்ளவர்கள் வாயில் ஐஸ்கிரீமை சப்பிக்கொண்டு ரசித்து வேடிக்கை பார்த்ததை நானும் பார்த்து சிரித்து ரசித்தேன்.

    நம்ம ஊரிலும் பட்டையை கிளப்பலாமா? நான் ரெடி சாகுல் பாய்.

    ReplyDelete
  6. Appade anral
    kaatduppalle kanthure el
    kadaipodalam anru sollugka. Mennal sar

    ReplyDelete
  7. This is our rights no one can interfere ,, please do it yours work ... If you do not like do not come to that place,

    ReplyDelete
  8. அறிவாளிகள், சமுதாய அக்கறையுள்ளவர்கள், அமைதியை விரும்புபவர்கள் இவர்கள் போன்றவர்கள் கருத்துக்கள் இப்படித்தான் இருக்கும்.

    //
    மஸ்தான் கனிMarch 31, 2015 at 8:38 PM
    தர்காவின் எதிர்ப்புறமிருக்கும் மின்சாரக் கலையரங்கில் இன்று இரவு .....அப்படின்னு விளம்பரம் பண்ணின காலம்போச்சு.அதே போல வழிபாடும் மாறிப்போச்சு ஏதோ வருடத்தின் நினைவாக ஒரு நிகழ்ச்சி வைத்து விழாவை முடித்து விடுகிறார்கள்.

    அப்போ கந்துரிவிலாவில் பார்த்ததை விட இப்போ Whatsup -ல் அதிகமாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் - இயக்கம் இருப்பதற்காக கலக்டரை பார்த்து மனுகொடுக்கிரார்கள் அவ்வளவு தான். மக்களுடைய வாழ்வாதார பிரச்சனையில் அக்கறை உண்டா என்றால் இல்லை என சொல்ல தோணும்.
    எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அரசியலில் எதிர்க்கட்சி எதிர்ப்பது வழக்கம் போல இவர்கள் எதிர்த்துக்கொண்டிருப்பார்கள் இருப்பார்கள் - நடப்பது நடந்து கொண்டிருக்கும் உலகம் உள்ளவரையில்.//

    ReplyDelete
  9. ஏதாவது ஒன்றைக்கிளப்பி விளம்பரம் தேடுவது அரசியலில் சகஜமப்ப !

    சும்மா இருந்த என்ன ஆதாயம் கிடைக்கும்.?

    இவர்களாலே அண்மையில் ஓரிரு வருடமாக அரசுக்குத் தொல்லை.

    ReplyDelete
  10. இதுபோன்ற ஊர் அமைதியைக் கெடுக்கும் பேட்டிகள், செய்திகள் போடுவதை அதிரை நியுஸ் தவிர்த்துக்கொள்வது நல்லதானதே,

    ReplyDelete
  11. நாங்கள் தயார். தயவு செய்து. சகோதரர். சாகுல்ஹஹமீதுக்கு. அதரவு கொடுங்கள்

    ReplyDelete
  12. Yathunai Thowhithu vathigal veettil TV ellai endru solla sollungal parppom ?
    ellai TV erunthum naangal vera Anacharangal parkkavillai endru Allahukku bayanthu solla sollungal parppom ??

    ReplyDelete
  13. silaperukku Thowhithu pidikkathu ,sila perukku tharga valibadu pidikkathu .....thowhithu kuttam podumpothu thowhithai pidikkathavargal pirachanai seigirargala ???

    ungalukku mattum edarkku evalvu thimiru ??

    ReplyDelete
  14. Yathunai Thowhithu vathigal veettil TV ellai endru solla sollungal parppom ?
    ellai TV erunthum naangal vera Anacharangal parkkavillai endru Allahukku bayanthu solla sollungal parppom ??

    ReplyDelete
  15. //இதுதொடர்பாக அதிரையில் வாழுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ அல்லது பொதுமக்களிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.//

    அது சரி, மார்க்க அறிஞர் என்று யாரைச் சொல்கிறார் இவர் ? யாரை மார்க்க அறிஞர் என்று இவர் ஏற்றுக்கொண்டார் ?
    ஒரே குழப்பம் ???
    அப்படியானால் இவர் அவர்களை விட மகா அறிஞரோ ?
    நாலு வரத்தை எதையாவது கத்தி பேசத் தெரிந்தால் அறிஞர் ஆகிடலாமோ ?
    புதுக் கொள்கையில் இதெல்லாம் சஜமப்ப ??? என்று முனுமுனுப்பது புரியாமல் அல்ல !

    அவர்கள் சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள். நீங்கள் பக்கா வஹாபி என்று துணிந்து வெளியில் சொல்லமுடியாத நடிகர்கள் ! எப்படி அவர்களை குறைகூற உங்களால் முடிகிறது ? திசைமாறி போன நீங்கள் உங்கள் தாய் தந்தையர் வழிகளை தவறு என்று சொல்லும் புதுமை வாதிகளோ !

    ReplyDelete
  16. அல்லாஹ் என்பார், ரசூல் என்பார், அனாச்ச்சாரம் என்பார். இதற்கு எதற்கும் விளக்கம் இவர்களுக்குத் தெரியாது என்பது தெரியுமோ ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.