ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் காலை 8 மணிக்கு திறந்த பின்னர் 'கன்பார்ம்' டிக்கெட்டுகளை வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான்.. ஓரிரு
நிமிடத்திலேயே அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுதீர்ந்துவிடுகிற மர்ம மாயம்தான்
புரியாத புதிராக இருந்து வந்தது.. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் துறைசார்ந்த
விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஓரிரு
நிமிடங்களிலேயே சுமார் 4 ஆயிரம் கன்பார்ம் பெர்த்
டிக்கெட்டுகள் புரோக்கர்கள் வசம் கைமாறுகிற கண்கட்டி வித்தை நாள்தோறும்
அரங்கேறுவது தெரியவந்துள்ளது.
இது எப்படி சாத்தியமாகிறது? பயணிகளுக்கான ரிசர்வேசன்
சாப்ட்வேரில் ஒரு ஆப்சன் உள்ளது. அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் பயணம்
செய்ய டிக்கெட் எடுத்துவிட்டீர்கள்.. திடீரென அந்த நாளில் நீங்கள் பயணிக்க
முடியாமல் போனால் கடைசி நிமிடங்களில் அதே ரிசர்வேசனை பயன்படுத்தி முன்கூட்டியே
அல்லது பின்னர் வேறு ஒருநாள் பயணிக்கக் கூடிய வகையில் டிக்கெட்டுகளை மாற்றிக்
கொள்ள முடிகிறது. இப்படித்தான் இடைத்தரகர்கள் ரயில்வே பணியாளர்கள் உதவியுடன் ஏதோ
சில சாதாரண ரயில்களில் டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். பின்னர் காலை 8 மணியளவில் இந்த டிக்கெட்டுகளை கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்
ரயில்களுக்கு உரியதாக மாற்றி வைத்துக் கொண்டு மிக அதிக விலைக்கு விற்பனை செய்து
வந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் இப்படி
கள்ளத்தனமாக மாற்றப்பட்டு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்திருக்கிறது. இதைக்
கண்டுபிடித்த ரயில்வே நிர்வாகம், ரிசர்வேசன் சாப்ட்வேரில்
இருக்கும் அந்த ஆப்சனை நீக்கிப் பார்த்த போது ஓரிரு டிக்கெட்டுகள் மட்டுமே மாற்றம்
செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளதாம்... இதுதான் காலை 8 மணிக்கு டிக்கெட் கிடைக்காமல் போகும் சூட்சமமாம்!
காலக்கொடுமையடா!!
நன்றி. தட்ஸ்தமிழ் டாட் காம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால்
முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்)
கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.