.

Pages

Wednesday, March 18, 2015

அதிரை லயன்ஸ் சங்க கூட்டத்தில் ₹ 1.5 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி !

அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆளுநர் அலுவல் வருகை கூட்டம் இன்று இரவு அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் கே. பிரேம் மற்றும் பி. குமுதவள்ளி ஆகியோர் அலுவல் பூர்வ ஆய்வை துவக்கி வைத்து, நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இதில் ₹ 1.5 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதிரை வள்ளியம்மை நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு ₹ 35 ஆயிரம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிரை அரசு மருத்துவமனையின் நோயாளிகளை அழைத்து செல்ல மூன்று சக்கர வாகனம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிரை பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ரேணுகா, திலகர் தெருவை சேர்ந்த சிறுவன் முஹம்மது பைசல் ஆகியோருக்கு தலா ₹ 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. காதிர் முகைதீன் கல்லூரியில் எம்.பி.ஏ வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கல்வி உதவி தொகை ₹ 10 ஆயிரம் வழங்கப்பட்டது. மிலாரிக்காடு, நடுத்தெரு, திலகர் தெரு ஆகிய 3 நலிவடைந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் கே. பிரேம் அவர்களின் சேவையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி, எஸ்.எம். முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, எஸ். அப்துல் ஹமீது, எம். நெய்னா முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

லயன்ஸ் சங்க மாவட்ட அவைசெயலாளர் டி. மணி வண்ணன், பொருளாளர் வி. மூர்த்தி, மண்டல தலைவர் ஆர். பாலசுந்தரம், வட்டாரத்தலைவர் ஆர். கோவிந்தராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் டி. ராஜேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்சிகள் அனைத்தையும் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி மற்றும் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர்கள், நெய்னா முகம்மது பேராசிரியர் அல் ஹாஜி, பொருளாளர் ஆறுமுக சாமி ஆகியோர் செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 


 
 
 
 



1 comment:

  1. தங்களுடைய அருமையான மனித நேயத் தொண்டுகள் குறிப்பாக ஆதரவற்ற குழந்தைகளுகுக் கழிப்பிடம் கட்டிக் கொடுத்த சேவை பாராட்டத் தக்கது. விழாவில் கலந்துகொண்டு இவர்கள் செய்த சேவைகளைக் கண்டு வாயடைத்துப் போனேன்.

    நிர்வாகிகளுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.