.

Pages

Wednesday, March 25, 2015

அதிரை அருகே உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்திரவுப்படி காசநோய் துணை இயக்குநர் டாக்டர்.வி.டி.முருகேசன் ஆலோசனைப்படி உலக காசநோய் தினத்தை (மார்ச் 24) முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் காச நோய் அலுவலகம், செருவாவிடுதி காசநோய் அலகு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் தாமரங்கோட்டை, தாமரங்கோட்டை ஸ்ரீ குமரன் கல்வியியல் கல்லூரி ஆகியன இணைந்து அதிரை அருகே உள்ள தாமரங்கோட்டையில் மார்ச் 25ந் தேதி காலை காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கினையும், விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ குமரன் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஆர்.வீரப்பன் தலைமை வகித்தார். தாமரங்கோட்டை அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.த.விடுதலைவேந்தன் முன்னிலை வகித்தார். முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் த.விஜயகுமார் வரவேற்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி.ஆச்சிக்கண்ணு நடராஜன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் கலந்துகொண்டு பேசியபோது...
மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் காச நோயால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வருடத்திற்கு 3 லட்சம்பேர் உயிரிழக்கிறார்கள். தொடர்ந்து 2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், எடை குறைதல், பசியின்மை, சளியில் இரத்தம் கலந்து வருதல் போன்றவை காசநோயின் அறிகுறிகளாகும்.

உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் காசநோயால் பாதிகப்படலாம். நம் உடலில் தலைமுடி, நகம், பல் ஆகிய இரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளும் காசநோயால் பாதிக்கப்படலாம்.  80 சதவீதம் நுரையீரல் பாதிக்க கூடிய காசநோயாகவும் 20 சதவீதம் நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளை பாதிக்கக் கூடியதாக காச நோய் உள்ளது.

நுரையீரல் பாதிக்கப்பட்ட காசநோயாளி ஒவ்வொரு முறை இரும்பும்போது 1 லட்சம் காசநோய் கிருமிகளை காற்றில் பரப்புகின்றனர். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு காசநோய் கிருமி உள்ளே சென்று காசநோயாக மாறுகிறது. ஒரு நுரையீரல் பாதிக்கப்பட்ட காசநோயாளி ஆண்டுக்கு 15 புதிய காசநோயாளிகளை உருவாக்கிறார். காசநோய் பெண்களின் கர்ப்பபையை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. காசநோய்க்கான சளிப் பரிசோதனை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

காசநோய்க்கான சிகிச்சை நேரடி பார்வையில் குறுகிய கால சிசிச்சையாக “டாட்ஸ்” என்ற பெயரில் 6 மாதத்திலிருந்து 8 மாதம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து அரசு சார்ந்த மருத்துவ மனைகளிலும் இலவசமாக வழங்கப்படும்.

காசநோய் சிகிச்சையை முழுமையாக எடுத்துகொள்ளாதவர்களுக்கு பல மருந்து எதிர்ப்பு காசநோய் வர வாய்ப்புள்ளது. இவர்களுக்கும் 2 வருட சிகிச்சையும் வழங்கப்படுகிறது. ஆகவே ஆரம்ப நிலையிலேயே தொடர் சிகிச்சையை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளி மற்றும் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் காசநோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காசநோயாளிகள் தொடர் சிகிச்சையுடன் சத்தான உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வது அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.வி.கிருத்திகா, டாக்டர்.சி.ஜெசி வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் வி.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர் பாம்பன், நம்பிக்கை மைய ஆற்றுனர் ந.ரூபநாயகி, களப்பணியாளர் எம்.ஜூலியட், கல்லூரி முதல்வர் சே.அருள், டி.தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர். முடிவில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் க.அன்பரசன் நன்றி கூறினார்.

1 comment:

  1. காசநோய் தடுப்பு முறைகள் மற்றும் காசநோயின் அறிகுறிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளும், காசநோய் தொடர்பாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் விபரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் இதன் மூலம் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். பேரணியில் கலந்துக்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.