அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோருக்கு வழங்கப் பட்டது. காந்தியடிகளின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இந்த விருதுகளை வழங்கினார்.
காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மையாக பணியாற்றிய வர்களுக்கான காயிதே மில்லத் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இருவருக்கும் விருதினை மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார். விருது பெற்ற இருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தேர்வுக்குழுவில் இடம்பெற்றி ருந்த மத்திய அரசின் முன்னாள் செயலர் மூசாரஸா, கல்வியாளர் வசந்தி தேவி, பேராசிரியர் அ.மார்க்ஸ், பிஷப் தேவசகாயம், கேப்டன் அமீர் அலி மற்றும் தமிழ் நாடு தலைமை காஜி சலாஹுதீன் முகம்மது அயுப் சாஹிப், ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தமுமுக துணை தலைவர் குணங்குடி ஹனீபா , பொதுச்செயலாளர் அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா உள்ளிட்டோர் பல அரசியல் தலைவர்களும், கல்லூரி பேராசிரியர்களும், மாணவ மாணவி கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.