.

Pages

Sunday, March 29, 2015

அதிரை கடலோரப்பகுதியில் ஐ.ஜி சொக்கலிங்கம் ஆய்வு !

தஞ்சை கடலோரப்பகுதியில்  கடலோர பாதுகாப்பு குழுமம் ஐ.ஜி சொக்கலிங்கம் கடலில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிரை கடலோர பாதுகாப்பு காவல்நிலையத்திற்கு வருகை தந்து அங்குள்ள பதிவேடுகள், ஆயுத கிடங்கு, வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபரிடம் கூறுகையில்... 
மொத்தம் 176 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழ்நாடு கடற்கரை நிலம் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு சிசிடிவி கேமிராக்கள் வீதம் பொருத்தப்பட இருக்கிறது. தமிழக கடற்கரை பகுதியில் மொத்தம் 3000 கேமிராக்கள் பொருத்தப்பட இருக்கிறது. மேலும் சகதி மற்றும் மணல் பகுதியில் இயங்கும் 24 ஏடிவி டேங் வாகனங்கள் வாங்கப்பட இருக்கிறது. இதில் அதிரை கடலோரப்பகுதிகளுக்கு 4 வாகனங்கள் வழங்கப்பட இருக்கிறது' என்றார்.

பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி. பீட்டர் அகஸ்தியன், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் கடலோரப் பாதுகாப்பு உதவி ஆய்வாளர்கள் ஞானசேகரன், முத்துகுமரன், ராஜசேகரன், வில்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.