தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு கிராமத்தை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கிராம தத்தெடுக்கும் திட்டத்தின் மூலம் தத்தெடுத்ததை முன்னிட்டு சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 217 பயனாளிகளுக்கு ரூ.23 இலட்சத்து 32 ஆயிரத்து 275 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையேற்றார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் பேசியதாவது...
இந்தியாவில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 180 ராஜ்ய சபா உறுப்பினர்கள் அவரவர்கள் தங்களது தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க பட்டுக்கோட்டை வட்டம், ஒட்டங்காடு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி சாலை வசதிää குடிநீர் வசதிää தெரு விளக்கு வசதிää மருத்துவ வசதி மேலும்ää வங்கி வசதி வரை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தாய் திட்டம்ää பசுமை வீடு திட்டம்ää இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம்ää சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்ää பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்ää பொது நிதி என அனைத்து நிதிகளையும் ஒருங்கிணைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான பேருந்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
கிராமப்புற மக்கள் அரசின் திட்டங்களை நன்கு அறிந்து பயன்பெற வேண்டும். அனைவரும் கட்டாயம் விரிவான காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை பெற வேண்டும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் அடையாள அட்டைகள் மூலம் பல்வேறு பயன்களை பெறலாம். நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று அதன் மூலம் பல்வேறு உதவி தொகைகளை பெறலாம். எனவே அரசின் திட்டங்களை அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி எளிதாக பலனை அடையலாம். இது போன்ற அரசின் திட்டங்களை கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அரசு அலுவலர்கள் மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கூட்டாக முயற்சி செய்து திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
விரிவான காப்பீட்டு திட்டத்;தின் மூலம் ஆயிரத்து 16 நோய்களுக்கு கட்டணமின்றி சிகிச்சைகளை பெற்றுள்ளனர். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயி குடும்பங்களை சேர்ந்தவர்கள் கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப தலைவர் இறந்தால் நிவாரண உதவிகள் போன்ற எண்ணற்ற பல சலுகைகள் பெறலாம். நல வாரிய அடையாள அட்டைகள் பெற்றவர்கள் வயதான காலத்தில் அரசின் உதவி தொகைகள் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சுயமாக தொழில் செய்ய முன் வந்தால் ஆண்களுக்கு 15 சதவிகிதமும், பெண்களுக்கு 25 சதவிகிதமும் மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. இவற்றையும் கிராமப்புற மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் தற்காலிகமான உதவிகளை பெற்றாலும். நிரந்தரமாக வறுமை போக்குவதற்கு ஓரே வழி கல்வி தான். சிறப்பு முகாமிற்கு வருகை தந்துள்ள பெண்கள் கண்டிப்பாக தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். ஆரம்ப கல்வி தொடங்கி உயர் கல்வி வரை அனைத்து உதவிகளையும் அரசு கட்டணமின்றி வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரியில் படிக்கின்ற போது அனைத்து உதவிகளையும் அரசே ஏற்கின்றது. தஞ்சாவ10ரை சேர்ந்த திவ்யா என்கின்ற மாணவி வெளிநாடு சென்று படிப்பதற்கு ரூ.15 இலட்சத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. எனவே வறுமையை போக்குகின்ற ஒரே ஆயுதம் கல்வி தான். எனவே எக்காரணத்தை கொண்டும் யாரும் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது. நன்றாக படித்து நாட்டிற்கும், வீட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் பேசினார்கள்.
விழாவில் 12 நபர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளையும், 17 நபர்களுக்கு விரிவான காப்பீட்டு அடையாள அட்டைகளையும், 8 நபர்களுக்கு விபத்து நிவாரணமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.4 இலட்சமும், நான்கு விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 150 இடுபொருட்களையும், தோட்டக்கலை துறை சார்பில் மூன்று விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரத்து 500 மதிப்பில் விசை தெளிப்பான் மற்றும் விளக்கு பொறிகளையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.9 இலட்சத்து 37 ஆயிரத்து 125 மதிப்பில் டிராக்டர், மினி டிராக்டர், பவர் டில்லர்களையும், 90 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களையும், 36 நபர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.4 இலட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பிலும், 39 நபர்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.3 இலட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலும், 5 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், ஆக மொத்தம் 217 பயனாளிகளுக்கு ரூ.23 இலட்சத்து 32 ஆயிரத்து 275 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
முகாமில் மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஊட்டச் சத்து துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி.சாந்தி அசோக்குமார் (பேராவூரணி) திரு.குழ.சுந்தர்ராஜன், (சேதுபாவாசத்திரம்), மாநில கயிறு வாரிய தலைவர் திரு.எஸ். நீலகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திருமதி.தவமணி மலையப்பன், திரு.குருசேவ், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி. ஜெயராணி மைக்கேல்சாமி, பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திரு.எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, திரு.மலையய்யன், திரு.கார்த்திகேயன், திரு.குழ.செல்லையா, தனித்துணை ஆட்சியர் திருமதி. ஜனனி சௌந்தர்யா, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.அரங்கநாதன், வட்டாட்சியர் திரு.சேதுராமன், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுமதி ராசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.