.

Pages

Friday, March 27, 2015

தமிழ் நாட்டில் – வட மாநில சகோதரர்களா? அம்மாடியோவ்.!?


தமிழகம் ஒரு காலத்தில் கழனி முதல் கடைகள் வரை தமிழர்களால் நிறைந்து காணப்பட்டது.

எந்த வேலையாக இருந்தாலும், எப்பேர்பட்ட வேலையிலும், மேலும் ஹோட்டகளாக இருக்கட்டும், கட்டிட வேலைகளாக இருக்கட்டும் மேஸ்திரிகளாகவும், சித்தாட்களாகவும், கொத்தனார்களாகவும், சர்வர்களாகவும், கல்லாப்பெட்டியிலும், முதலாளிமார்களுக்கு வலது கையாட்களாகவும் முக்கிய இடம் பிடித்தவர்கள் சொந்த மொழி பேசும் தமிழ் மக்கள்தான்.

சுற்றம் புடை சூழ வியாபாரம் அன்று கலைகட்டியது. முக்கால்வாசிப் பேர் வாப்பா, மகன், பேரன், மாமன், மச்சான், மருமகன், தூரத்துச் சொந்தம், ஊர்க்காரர் இப்படிதான் வேலையில் அமர்த்தி இருப்பார்கள். காரணம் உரிமையுடன் உற்சாகமாக பேசிக் கொண்டு வேலையைப் பார்த்து உயர்விற்கு வழி செய்யவும் தயாராக இருந்ததுதான். இப்படி கல கலவென்று உயர்ந்தவர்களில் பல பேர்களைச் சொல்லலாம்.

அன்று அதிரையர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாழ்வு அளித்த “அஹ்மது அன் கோ என்ற நிறுவனத்தை மறக்க முடியுமா? இப்படி ஒவொன்றாக நன்கு ஆராய்ந்தோமேயானால் தமிழகத்தின் பல ஊர்களில் அந்தந்த ஊர் மக்களை அந்தந்த ஊர் நிறுவங்கள் கை கொடுக்க தவறியதில்லை. மேலும் சொந்த ஊர் என்றில்லாமல் தாய் மொழிப் பேசக்கூடிய அத்தனை மக்களுக்கும் வேலை கொடுக்கப்பட்டது.
  
1968-களில் என்னுடைய தகப்பனார் “மர்ஹூம். கோ.முஹம்மது அலியார் அவர்கள், சென்னை புரசைவாக்கம் ஹை ரோட்டில், ஹோட்டல் கார்டன் வளாகத்தில் “Leaf Land என்ற பேயரைத் தாங்கிய ஒரு ஷாப் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடையில் என்னுடைய சிறிய தகப்பனார் “மர்ஹூம். கோ.முஹம்மது ஷேய்காதியார் அவர்கள், மச்சான் சம்சுதீன் அவர்கள், காக்கா அப்துல்றஹீம் அவர்கள், கீழக்கரையைச் சேர்ந்த பெரோஸ்கான் காக்கா ஆகியோர்களோடு நானும் சிலகாலம் இருந்துள்ளேன். இதையும் என்னால் மறக்க முடியாது.

அன்று தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் பணியில் இருக்கும் எல்லோருக்கும் சேர்த்து ஒன்றாக சமைப்பதற்காக தாய் மொழி பேசக்கூடிய சமையல் காரர்களே அந்தப் பணியிலும் இருந்தனர்.

என்னுடைய வாப்பா, மதராசிலிருந்து ஊருக்கு வர்றேன் என்பதை கடிதம் மூலம் தெரிவிப்பார்கள், அந்த கடிதத்தை அன்றைய தபால் காரராக இருந்த காலம்சென்ற திரு.கோபால் அவர்களை மறக்க முடியாது. மூன்று வீடுகளுக்கு முன்பு வருபோதே தபால் வந்த செய்தியை உரக்க சொல்லுவார்.

அன்று இருந்த ஒற்றுமையும், அன்பும், பாசமும், அரவணைப்பும், நட்பும், சகோதரத்துவமும்.!. இன்று எல்லாமே மாறிப் போய் கிடக்கின்றது. உண்மையைச் சொல்லப்போனால் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் எல்லாமே தலைகீழாக மாறிப்போய் கிடக்குது, அண்ணன் தம்பிகளுக்குள் பலவகையான வேற்றுமைகள், சொந்தங்களுக்குள் பலவகையான வெறுப்புகள், இப்படி பலவகைகளில் மனசுகள் விலகி யாரோ எவரோ என்றாகி இறுதியில் நம்பிக்கை அறுந்து போய், வேறு நபர்கள் நம்பி இன்னும் மோசமாக போய், மீண்டும் சொந்தங்களின் முகங்களை பார்பதற்கு வெட்கப்பட்டு போன இதயங்களும் உண்டு.

தமிழகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவிதம் மற்ற மொழிகள் பேசக் கூடிய வடகிழக்கு மாநில மக்களே, ஏன் அவ்வளவு தூரம் போகணும், நமது அதிரையை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளிலும் வட மாநிலத்தவர்களை ஈடுபடுத்தப்படுவதை காணலாம்,

நான் சில தினங்களுக்கு முன் மாலை ஆறுமணியளவில் மக்தூம் பள்ளிக்கு அருகில் உள்ள அல்-சனா பள்ளிக் கூடத்திற்கு வேலையாக சென்று இருந்தேன், அருகில் உள்ள கடை வாசலில் புது முகங்களாக பல முகங்கள் காணப்பட்டன. விசாரித்த வகையில் அத்தனை பெரும் கட்டுமான பணிக்காக வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கடைக்காரர் சொன்னார்.

பெருநகரங்களில் இதே நிலைதான், சென்னை மட்டுமல்லாது மதுரை, திருச்சி, சேலம், கோவை போன்ற நகரங்களில் தற்போது அதிக அளவில் வட மாநிலத்தவர்களை பணியில் இருப்பதை பார்க்கலாம்.

அப்படி என்றால் தமிழர்களுக்கு உழைக்கத் தெரியாதா? என்ற கேள்வியை வைத்தால்! தமிழ் நாட்டு பணியாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்கத் தயங்குகிறார்கள் என்ற பதில் வருகிறது.

வட மாநிலத்தவர்கள், சம்பளத்திற்காக உழைப்பதில்லை, மேலும் கொடுக்கப்படுகின்ற வேலையையும் மாங்கு, மாங்கென்று பார்க்கின்றார்கள், சம்பளத்தை பற்றிக் கவலையும் படுவதில்லை, இந்த சம்பளம்கூட அவர்களது ஊரில் கிடைப்பது அரிது, இதனால்தான் அவர்கள் இந்த வேலையை பார்க்க தமிழகத்துக்கு வருகின்றார்கள் என்று, வேலைக் கொடுப்பவர்கள் சொல்கின்றார்கள்.

வாட்டி வதைக்கும் வறுமை, அதே போல கட்டிடத் தொழிலாளர்கள் முதல் கட்டிட ஒப்பந்தக் காரர்கள் வரையில் வட மாநிலத்தவர்கள் பணியில் இருப்பதை தமிழகத்தில் பல இடங்களில் காணலாம். அவர்களும் வறுமை நிலை காரணமாக அதிக சம்பளமெல்லாம் எதிர்ப்பார்ப்பதில்லை என்று பலர் கூறுகின்றனர்.

நான் கடந்த சில வாரங்களுக்கு முன் திருச்சி மாநகருக்கு சென்றிருந்தேன். பகல் உணவிற்கான பசி வரவே சாப்பிட ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன். என்ன புன்னகை அது, பரிமாறுவதிலோ, டேபிள் துடைப்பதிலோ, மொழி தெரியாவிட்டாலும் ஒரு வித புன்சிரிப்புடனேயே கடந்து போகின்றார்கள். ஆனால், அதில் குடும்பத்தை விட்டு விட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக பல நூறு மைல் தூரம் கடந்து வந்திருக்கும் சோகமும் இழையோடிக் கொண்டுதான் இருக்கின்றது.

அதிரை நகரில் தற்போது கட்டுமான பணிக்கு வட மாநிலத்தவர்களை அதிகமாக காணலாம், இனி வரும் காலங்களில் மளிகைக் கடை, காய்கறி கடை, மீன் கடை, இறைச்சி கடை, இப்படி அவர்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு சான்சே இல்லை.


இன்ஷா அல்லாஹ் மறு பதிவில் வட மாநிலத்தவர்களின் சுபாவங்களை விரிவாக பார்க்கலாம்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

2 comments:

  1. வடமாநில மக்களின் வன்மம் ..
    இங்கும் பரவாமல் இருக்க ....
    தமிழர்கே வேலை கொடுப்போம் ..
    என்ன இருந்தாலும் ..தமிழக மக்களின் மன நிலை வட மாநிலத்தவருக்கு கிடையாது .கன்னட மாநிலத்தவருக்கு கூட கிடையாது

    ReplyDelete
  2. வட மாநில வேலைக்கார ஆட்களை நம்மூருக்கு இறக்குமதி செய்தது, நம்ம அதிரை ஆட்களே.

    //அதிரை நகரில் தற்போது கட்டுமான பணிக்கு வட மாநிலத்தவர்களை அதிகமாக காணலாம், இனி வரும் காலங்களில் மளிகைக் கடை, காய்கறி கடை, மீன் கடை, இறைச்சி கடை,//

    மீதி பதவி எங்கே போச்சு. வீட்டுக்கு மறு மகன்களாக வருவதற்கு சான்ஸ் இருக்குதே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.