.

Pages

Sunday, May 31, 2015

புனித ‘கஃபா’வை தூய்மைப்படுத்திய சவூதி மன்னர் !

ஆதம் நபியால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இறைவனுக்கான முதல் வணக்கஸ்தலம் என்றும் நம்பப்படும் மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் வழக்கப்படி சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இன்று கழுவி, தூய்மைப்படுத்தினார்.

பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயிப் உடன் கஃபாவுக்கு வருகைதந்த மன்னரை மக்கா நகர கவர்னர் வரவேற்றார். மக்கா நகரில் நிறைவேற்றப்படவுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மன்னர், இந்த திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கா நகர கவர்னரும், தனது மகனுமான இளவரசர் காலித்-துக்கு உத்தரவிட்டார்.

மக்கள் சங்கமம் மாநாட்டில் அதிரை சாதனையாளர்கள் கெளரவிப்பு !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், வரலாற்று கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.

மக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று மாலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கான பரிசுகள், அதிரையளவில் உள்ள சிறந்த சாதனையார்களுக்கான விருது மற்றும் மக்கள் சங்கமம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மராத்தான் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கான மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 

முத்துப்பேட்டையில் பரபரப்பு: அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி TNTJ நிர்வாகிகள் 30 பேர் கைது !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் முத்துப்பேட்டை அ.நெ பள்ளி அருகில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எம்.ஏ ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் முஹம்மது மஹ்தூம்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் பாஜிலா பர்வீன் ஆலிமா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிலையில் முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 30 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டத்திற்கு ஒலி ஒளி அமைத்த கொடுத்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மைக்செட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.
 
 
 
செய்தி:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

மரண அறிவிப்பு !

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு.நெய்னா முகமது கு.மு. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரர் மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் முகம்மது சனூன் அவர்களின் தாயாருமாகிய ஆருசா அம்மாள் அவர்கள் இன்று காலை கொழும்பில்  வஃபாத்தாகிவிட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணியளவில் கொழும்பு  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நாள் விழாவில் பலர் பங்கேற்பு !

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், வரலாற்று கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.

மக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று மாலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் எஸ். நிஜாமுதீன் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி சேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம். முஹம்மது பைசல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி மற்றும் அதிரை நகர PFI பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் எம். முஹம்மது ரசீன், மாநில பேச்சாளர் கோவை ஏ. ஹாரூன், காரைக்கால் மாவட்ட தலைவர் ஏ. முஹம்மது ஹசன் குத்தூஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

விழாவில் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கான பரிசுகள், அதிரையளவில் உள்ள சிறந்த சாதனையார்களுக்கான விருது மற்றும் மக்கள் சங்கமம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மராத்தான் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கான மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக டிவிசன் செயலாளர் எம் சேக் அஜ்மல் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகர தலைவர் அஹமது ரிழா நன்றி கூறினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.
 
 

Saturday, May 30, 2015

மாவட்ட ஆட்சியர் வழங்கிய தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் !

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்ற தொகுதிகளில் 12 கிராமங்களிலும் 2 பேரூராட்சிகளிலும் 13 ஆயிரத்து 539 குடும்பங்களுக்கு  விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் வழங்கினார்.

விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), திரு.எம்.ரெத்தினசாமி (திருவையாறு), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவையாறு சட்ட மன்ற தொகுதி அலமேலுபுரம், விஷ்ணம்பேட்டை, வரகூர், கோனேரிராஜபுரம், நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி மேற்கு, ராயம்பேட்டை, ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதி குலமங்களம், தோப்புவிடுதி, பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி, மதுக்கூர் பேரூராட்சி, அதிராம்பட்டிணம் பேரூராட்சி, பேராவூரணி சட்ட மன்ற தொகுதி காட்டாத்தி, ஒட்டங்காடு மற்றும் செங்கமலம் கிராமங்களில் 13 ஆயிரத்து 577 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மின்விசிறிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 95 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 80 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.   தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 444 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவை பசுக்கள், திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 16 வகையான உபகரணங்கள், உதவித்தொகை, ஊக்கத்தொகை, விலையில்லா மிதிவண்டிகள், காலணிகள், சீருடைகள், கர்ப்பிணி பெண்களுக்கு 12 ஆயிரம் உதவித் தொகை என ஏழை எளிய மக்களின் சிரமங்களை போக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும், ஏழை மக்களின் வறுமை போக்க ஒரே ஆயுதம் கல்வி ஒன்று தான்.  எனவே தான் பல்வேறு துறைகள் இருந்தாலும், கல்வி மட்டும் 26 ஆயிரம் கோடி மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

அனைவரும் கல்வி கற்று வேலை வாய்ப்பு பெற்று குடும்பத்தின் சிரமங்களை போக்கி 2023 ஆண்டு தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயருவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் பெண்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை குடும்பங்களை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.
   
ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் திறமையானவர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.  அதனால் தான் அனைத்து திட்டங்களும் பெண்களை மையமாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். திட்டங்களை பெறுகின்ற பொது மக்கள் அவற்றினை பலனை பெற்று  வாழ்க்கையில் நல்ல நிலையினை அடைய கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை.திருஞானம், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவர்  திரு.ஆர்.காந்தி, ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மணிமேகலை திருஞானசம்பந்தம் (பூதலூர்), திருமதி.மலர்கொடி தமிழரசன் (திருவையாறு), திரு.கோவிந்தராஜன் (ஒரத்தநாடு), திருமதி.ராமாமிர்தம் ராஜமாணிக்கம் (திருவோணம்), திரு.சாந்தி அசோக்குமார் (பேராவூரணி), திருமதி.சரோஜா மலையய்யன் (பட்டுக்கோட்டை), முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. எம்.ஜி.எம். சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர்கள் திரு.இளங்கோவன், திரு.நாகராஜன், திரு.எம்.ஆர்.முத்துகுமார், மாநில வேளாண்மை விதைச்சான்று உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திரு.குருசேவ், திரு.ராமன், திரு.ராஜா, திரு.சி.அருள்நம்பி, திரு.தவமணி மலையப்பன், மதுக்கூர் கூட்டுறவு பால்வளத் தலைவர் திரு.துரைசெந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.ராதாகிருஷ்ணன் (விஷ்ணம்பேட்டை), திரு.மணிகண்டன் (கோனரிராஜபுரம்), திரு.பாரதிதாசன் (நடுக்காவேரி), திரு.சி.சுகுமார் (ராயம்பேட்டை), திரு.சாமிக்கண்ணு (குலமங்களம்), திரு. ஆர்.மோகன் (வரகூர்), திரு.தர்மராஜ் (அலமேலுபுரம்பூண்டி), திருமதி.லெட்சுமி பகவத்சிங் (செங்கமலம்), திருமதி.ஜெயந்தி அசோக்குமார் (காட்டாத்தி), திருமதி.ராசு (ஒட்டங்காடு), பேரூராட்சி துணைத்தலைவர் திரு.ஆர்.ஜி.ஆனந்த் (மதுக்கூர்), திரு.பிச்சை (அதிராம்பட்டிணம்), கூட்டுறவு சங்கத் தலைவர்கள் திரு.சுப்பிரமணியன், திரு.கே.பி.சேகர், திரு.துரைமாணிக்கம், திரு.சண்முகம்,  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

அதிரையில் இன்னும் சற்று நேரத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் விநியோகம் !

அதிரை பேரூராட்சி நிர்வாக எல்லைக்குட்பட்ட கடற்கரைத்தெரு பகுதி வார்டு நீங்கலாக மீதமுள்ள வார்டு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற இருக்கிற விழாவில் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட இருக்கிறது. இவற்றை பெற்றுச்செல்வதற்காக அதிரை பகுதி பொதுமக்கள் திரளாக வருகை தந்து சமுதாய கூடத்தில் காத்துருக்கின்றனர்.
 
 

ஈசிஆர் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் !

அதிரை அடுத்துள்ள சம்பைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் காயம் உள்ளது.

அவர் நீலநிற கைலியும் சிகப்பு நிற சட்டையும் அணிந்துள்ளார். அவர் யார் ? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக சேது பாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈசிஆர் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரத்ததான சேவை விருதை TNTJ இரத்த தான கிளை பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது !

அதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை சார்பில் அதிரையில் ஆண்டுதோறும் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்த கொடையாளர்களிடமிருந்து அதிக இரத்த யூனிட்களை சேகரித்து இரத்த வங்கியிடம் வழங்கி வரும் பணி மற்றும் அவசரமாக இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இரத்த தானம் வழங்குவது. ஏழை நோயாளிகளுக்கு இரத்த வங்கியிடம் சலுகை கட்டணத்தில் இரத்தம் பெற்று கொடுப்பது உள்ளிட்ட சேவைக்காக விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த விருதை சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்கள் மூலம் அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை பொறுப்பாளர்கள் விழாவில் பங்கேற்காதது குறித்த தகவலை முன்கூட்டியே அதிரை நியூஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து விருதை உரியவரிடம் ஒப்படைப்பது என அதிரை நியூஸ் தேர்வு குழுவினர் முடிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நமது அழைப்பை ஏற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை இரத்த தான பொறுப்பாளரும், தொடர்ந்து அதிக முறை இரத்தம் தானம் செய்து வருபவருமாகிய ஹாஜி முஹம்மது அவர்கள் அதிரை நியூஸ் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வருகை தந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளைக்கு வழங்கிய சிறந்த இரத்த தான சேவை விருதை சிறுமி இஃப்ரா நிஜாம் அவர்களிடமிருந்து பெற்றுச்சென்றார்.

அதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு !

கடந்த 25/05/2015 ஆம் நாள் மாலை அதிரை சாரா திருமண மண்டபத்தில் அதிரை நியூஸ் சார்பாக நடைபெற்ற கல்வி மற்றும் சேவைகளுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் எண்ணத்தோடு இதனை அன்புடன் பதிவதில் மகிழ்கின்றோம்.

அதிரையின் வரலாற்றில், முதன்முதலாக ஒரு இணையதளத்தின் மூலம் இப்படி ஒரு கவின் மிகு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த கருணை புரிந்த இறைவனுக்கு முதலில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து வரும் வரும் ஆண்டுகளிலெல்லாம் இதேபோல் நிகழ்ச்சியை நடத்த அந்த வல்லவன் தனது கருணை மழையைப் பொழிய வேண்டுமென்று இருகரமேந்தி இறைஞ்சி நிற்கிறோம்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்று ஆலோசனையை முன்வைத்தபோது அதனை ஏற்றுக் கொண்டு உடனே ஆர்வமூட்டிய அதிரை நியூஸின் பங்களிப்பாளர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியை கூறிக் கொள்கிறோம். அவர்களின் ஆர்வமூட்டும் வார்த்தைகளும் அவர்கள் தந்த தைரியமும் ஒத்துழைப்பும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களுக்குத் துணை நின்றன என்பதை நான் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறோம்.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க நாங்கள் அணுகிக் கேட்டபோது மனமுவந்து ஒப்புக் கொண்ட மரியாதைக்குரிய அதிரையின் பெருமகன்களில் ஒருவரான சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J அப்துல் ரஜாக் B.A. B.L அவர்களுக்கு நன்றி என்கிற ஒரு வார்த்தை மட்டும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தலைமை தாங்க ஒப்புக் கொண்ட தருணமே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி துவங்கும் முன்பே வந்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J அப்துல் ரஜாக் அவர்களுக்கு அதிரை நியூஸ் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

எங்களின் அன்பான அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் 'சிகரம் தாண்டுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம் மன்சூர் அவர்களுக்கும், நிகழ்ச்சி நடைபெற்ற திங்கட்கிழமை அன்று கடுமையான பணிச்சுமை இருந்த போதிலும் எங்களின் கனிவான அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பரிசு மற்றும் பொருத்தமான துறை விருதுகளை தமது பொற்கரங்களால் வழங்க மனமுவந்து ஒப்புக்கொண்டு வருகை தந்து நிகழ்ச்சி நிறைவுறும் வரை இருந்து சுருக்கமாக இருந்தாலும் பலமுறை பார்வையாளர்களால் கைதட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த உரையாற்றிய மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்களுக்கும், கல்வி விருதுகளை தனது அன்புக்கரங்களால் வழங்கி உரையாற்றிய இராஜாமடம் அண்ணா பொறியியல் கல்லூரியின் புல முதல்வர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களுக்கும், ஆங்கிலப் பாடத்தில் முதன்மை இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு தனது அன்பான கரங்களால் பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி உரையாற்றிய அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களுக்கும், காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்களுக்கும், அன்புடன் விழாவில் கலந்து கொண்டு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் அவர்களுக்கும், மாவட்ட துணை இயக்குனர் ( தொழுநோய் பொறுப்பு ) டாக்டர் குணசீலன் ஆகியோருக்கு எங்களது அழைப்பினை ஆனந்தமாக ஏற்று விழாவில் கலந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி கூறுகிறோம்.

அதிரை நகரின் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் திரண்டு வந்து நிகழ்ச்சிகளின் தொடக்கம் முதல் நிறைவு வரை அமர்ந்திருந்து பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்களை உற்சாகமூட்டிப் பாராட்டிய காட்சிகளை நாங்கள் மறக்கவே இயலாது. உணமையில் சொல்லப்போனால் நாங்கள் அளித்த     பரிசுகளும் விருதுகளும் அளித்த உற்சாகத்தைவிட பொதுமக்கள், பைத்துல்மால், அரிமா, சுழற் போன்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள், சகோதர வலைதள நண்பர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிக்கை நிருபர்கள்  பக்கத்து ஊர்களிலிருந்து இந்தப் பாராட்டில் பங்கு கொள்ள வந்திருந்த ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்வமுடன் கைதட்டி ஊட்டிய உற்சாகமே வானளாவியதாகும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக நிகழ்ச்சி நடைபெற்ற சாரா மண்டபத்தின் மேல் தளத்தில் திரண்டு வந்து அமர்ந்து இருந்த தாய்மார்கள், அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், பேராசிரியப் பெருமக்கள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகளுக்கும், கிராம பஞ்சயத்தார்களுக்கும், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், சமுதாய அமைப்பு நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்வின் நிறைவு வரை காத்திருந்து கலந்து கொண்டு காட்டிய ஆர்வமும், ஊட்டிய உற்சாகமும் எங்களை மகிழ்வுக்கடலில் ஆழ்த்தின. அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் கிராத் ஓதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சிறுவன் முஹம்மது ஃபாதில், இனிய தமிழில் வரவேற்புரையாற்றிய அதிரை நியூஸ் ஆலோசகர் இப்ராஹீம் அன்சாரி, அழகுபட அறிமுக உரை ஆற்றிய காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம் ஏ முஹம்மது அப்துல் காதர், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து பணிகளையும் முன்னின்று எடுத்து செய்த அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் அஹமது மற்றும் நன்றியுரையாற்றிய அபுல் ஹசன் சாதலி ஆகியோருக்கு நன்றி கூறும் அதே வேளை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் அவர்களுக்கு அதிரை நியூஸ் தனது நன்றிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என்பதை இதயத்தின் அடித்தளத்தின் உணர்வாக இங்கே பதிய விரும்புகிறோம். எங்களின் இந்த உணர்வே இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்ட பலரின் உணர்வாக இருந்தது என்பதைக் கூறி இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனது மதிப்பிடமுடியாத ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்கியதுடன் எங்களுடன் ஓடியாடி உழைத்த பேராசியர் செய்யது அகமது கபீர்  அவர்களுக்கு எந்த வார்த்தையால் நன்றி சொல்வது என்றே எமக்குப் புரியவில்லை.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை பெரும் போட்டிகளுக்கிடையே தேர்ந்தெடுக்க உதவிய தேர்வுக்குழு உறுப்பினர்கள், தங்களின் பெயர்களை வெளியிட சம்மதித்ததும் சம்மதிக்காமலும் பரிசுகளை வழங்கிய வள்ளல்கள், விழாவின் முழுமையான இதர செலவுகளின் ஒரு பகுதியினை ஏற்றுக்கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்கள், நாங்கள் கேட்டதும் முழுமனதுடன் மண்டபத்தை ஒதுக்கித்தந்ததோடு மட்டுமல்லாமல் அவ்வபோது ஆலோசனைகளையும் வழங்கிய சாரா திருமண மண்டபத்தின் உரிமையாளர் லயன் அஹமது, நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ மற்றும் கேமிராவில் பதிவு செய்து நமக்கு வழங்கிய நண்பர்களுக்கும், சிறப்பான முறையில் ஒலி ஒளி அமைத்து தந்தவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை அனைவரிடத்திலும் எடுத்துச்செல்லும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர் ஆகியவற்றின் மூலம் விளம்பர உதவிகள் செய்த வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தங்களின் உணர்வாலும் உழைப்பாலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிட உதவிய ஒவ்வொரு நல்ல நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்வுடனும் அன்புடனும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவரையும் கனிவுடன் வரவேற்ற அதிரை நியூஸ் பங்களிப்பாளர்கள் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, மு.செ.மு சபீர் அஹமது ஆகியோருக்கு நன்றி. விழா சிறக்க அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அதிரை நியூஸ் நிர்வாகிகள் அதிரை மெய்சா, ஜபருல்லாஹ் மற்றும் பங்களிப்பாளர் அதிரை சித்திக் ஆகியோருக்கு நன்றி.

மேலும் உள்ளூரிலிருந்தும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைப் பார்த்தும் வீடியோ பதிவுகளைக் கேட்டும் பாராட்டிய அன்பான நண்பர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் இந்தப் பாராட்டுக்கள் எங்களை இன்னும் அதிகம் இந்த தன்னலமற்ற சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதை அறிவிப்பதில் ஆனந்தமடைகிறோம்.

இனி வரும் வருடங்கள் தோறும் தொடர்ந்து இத்தகைய சிறப்பான நிகழ்வை நடத்திடும் வல்லமையை வழங்கிட இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு      

தீவிர பயிற்சியில் ஈடுபடும் அதிரை கால்பந்தாட்ட வீரர்கள் !

கோடை விடுமுறை துவங்கி விட்டாலே அதிரை சுற்று வட்டார பகுதியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஆர்வத்துடன் நடத்தி வருவார்கள். குறிப்பாக கிரிக்கெட் போட்டி, கால்பந்தாட்ட போட்டி, கைபந்து போட்டி என அதிரை விளையாட்டு மைதானங்கள் களைகட்ட தொடங்கும்.

இந்நிலையில் அதிரை வெஸ்டர்ன் புட்பால் கிளப் ( WFC ) அணியின் கால்பந்தாட்ட வீரர்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தினமும் அதிகாலை நேரங்களில் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கூடும் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேலத்தெரு மருதநாயகம் மைதானம் களை கட்ட தொடங்கியுள்ளது. பயிற்சிகளை வீரர்களுக்கு பயிற்சியாளர் கோஸ் முஹம்மது வழங்கி வருகிறார்.

செய்தி மற்றும் படங்கள்:
அப்துல் வஹாப் ( உஜாலா )