நவம்பர் 14 - 15 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உட்பட உலகளவில் பிரசித்தி பெற்ற பல முக்கிய நபர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம், பின்தங்கிய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் வடிவமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் மேலும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மூலம் - இவ்வமைப்பின் உறுப்பினர் நிறுவனங்களுக்கு, 10,000 கோடி ரூபாய் அளவிலான தொழில் மேம்பாட்டுக்கான முயற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UNITED ECONOMIC FORUM (UEF) அமைப்பு சென்னையில் 1979ம் ஆண்டு துவக்கப்பட்டது. கீழக்கரையை சார்ந்த மறைந்த தொழிலதிபர் ஹாஜி பி.எஸ்.அப்துர் ரஹ்மான், இவ்வமைப்பின் நிறுவனர். தற்போது இவ்வமைப்பில் 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஹாஜி பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் மூன்றாவது மகனும், COASTAL ENERGEN குழுமத்தின் அதிபருமான அஹமது ஏ.ஆர்.புஹாரி, UEF அமைப்பின் தலைவராக தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாநாட்டுக்கு என வெளியிடப்பட்டுள்ள இணையதளம் முகவரி www.ueftradesummit.com
UNITED ECONOMIC FORUM அமைப்பின் பணிகளை விளக்கும் அவ்வமைப்பின் இணையதளம் முகவரி www.unitedeconomicforum.org
தகவலில் உதவி:
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், சென்னை.
நன்றி: காயல்பட்டினம்.காம்











Mashaallah.....
ReplyDelete