துபாய் மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக அந்நாட்டு காவல்துறை தீவிரவமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி "உங்களின் பாதுகாப்பு எங்களின் மகிழ்ச்சி" என்ற ஹேஷ்டேக்கில் துபாய் காவல்துறை டுவிட்டர் பதிவுகளை அண்மையில் வெளியிட்டது.
துபாய்வாசிகளுக்கு இதுதொடர்பான குறுஞ்செய்தி அனுப்பியுள்ள காவல்துறை, அதில், இணையதளம் ஒன்றின் இணைப்பையும் அளித்துள்ளது.
அந்த இணையதளத்தில், நீங்கள் துபாயில் மகிழ்ச்சியாக உள்ளீர்களா ? என ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 2 லட்சம் பேர் இந்த கணக்கெடுப்புக்கு பதில் அளித்துள்ளதாக துபாய் காவல் துறை தெரிவித்துள்ளது. இதில், 84 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 6 சதவீதம் பேர் இயல்பாகவும், 10 சதவீதம் பேர் மகிழ்ச்சியற்று இருப்பதாகவும் பதிலளித்துள்ளனர்.
எவ்வளவு குறுஞ்செய்திகளை தாங்கள் அனுப்பினோம் என்ற விவரத்தை காவல்துறை தெரிவிக்கவில்லை. ஆனால், மகிழ்ச்சியற்று இருப்பதாக தெரிவித்துள்ளவர்களை பரவலான முறையில் தொடர்பு கொண்டு அதற்கான காரணத்தைக் கேட்கப்போவதாக துபாய் காவல்துறை தலைவர் மேஜர் ஜெனரல் காமிஸ் மட்டார் அல் மேஸேய்னா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.