இந்தநிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரை பேருந்து நிலையம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த [ 23-06-2015 ] அன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - கடைத்தெரு பெரிய மார்க்கெட் சாலையில் பட்டுக்கோட்டை பிர்க்கா சர்வேயர் மூலம் சாலையின் இருபுறமும் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆக்கிரமிப்புகள் இருப்பது அரசு அலுவலர்களால உறுதி செய்யப்பட்டன. இதில் எந்தந்த பகுதிகள் ஆக்கிரமனத்தில் உள்ளன என்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறியீடு போடப்பட்டன.
இதைதொடர்ந்து அதிரை பேரூந்து நிலையம் முதல் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட், பெரிய ஜும்மா பள்ளி வரையிலான அதிரை - மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலையின் இருபுறமுள்ள ஆக்கிரமிப்புகளை 06-11-2015 க்குள் தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஒலிபெருக்கி அறிவிப்பும், சம்பந்தப்பட்ட பகுதி வர்த்தர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யபப்ட்டன. தவறினால் மறுநாள் காவல்துறை பாதுகாப்புடன் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணி நடைபெறும் எனவும் இதற்கான செலவுத்தொகை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளரிடம் வசூல் செய்யப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அதிரை பேரூராட்சி அறிவித்த காலக்கெடு நேற்றுடன் முடிவுற்ற நிலையில் இன்று மாலை அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளின் முகப்பு பகுதியில் காணப்படும் தரைப் பகுதிகளை அகற்றும் பணி பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி மேற்பார்வையில் நடந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டன. ஜேசிபி வாகனத்தால் இடிபாட்டிற்கு ஆளான பொருட்கள் அனைத்தும் பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டர் வாகனத்தில் அள்ளிச்செல்லப்பட்டன. இந்த பணிகளுக்கு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு பணிகளை அதிரை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் சுந்தர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது கூட்டம் கூடியதால் இந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. விடுபட்டுள்ள மீதமுள்ள பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் நாளை காலை முதல் மீண்டும் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் தங்கள் கடைகளின் முகப்பு பகுதியில் நீண்டுகொண்டு இருந்த தாழ்வாரங்களை தாங்களாக முன்வந்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதிகள் வெளிச்சமாக படர்ந்த பகுதியாக காட்சியளித்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் பரபரப்பை அடுத்து கடைத்தெரு பகுதியில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு இருந்தது.
மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமனம் நடைபெறமால் இருக்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிரை காவல்துறை கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும், எந்தவித அரசியல் குறுக்கீடு இன்றி பாரபட்சமில்லாமல் மீதமுள்ள அனைத்து பகுதி ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அபூ அஜீம்
படங்கள்: அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
இந்த தக்குவா பள்ளி கமிட்டிக்கு வாடகை குடுக்க வேண்டாம் என்று மேடை போட்டு பேசினார்கள் அரசியலுக்காக வெட்கம் இல்லாமல் அதே மேடையில் மார்க்கத்தை பற்றி பேசினார்கள் இப்போ எங்கே போனார்கள் ஜ சி பி முனால் குறுக்கே வந்து நிற்க வேண்டியது தானே மார்க்கத்தை வைத்து கேம் விலையாண்ட்வன் எரித்த மார்க்கெட் கடையை பள்ளி அனுமதி இல்லாமல் கடை கட்டி கொடுத்த தா மு கா ம ம க எங்கே இவனுக்கு நெஞ்சு வரையும் தாடி ஒரு கேடு அல்லாஹ்வின் பள்ளிக்கு வரும் வருமானத்தை கேட்டுதே தீருவோம் என்று பள்ளி கமிட்டிக்கு எதிராக நிற்ற எ டி ம் கே கருப்பு தமீம் பள்ளி கமிட்டஇல் மீண்டும் பதவி கிடைக்காத ஆவேசத்தால் கோபம் கொண்ட உண்டி ஹனீபா நான் ம ம க என்று சொலிக் கொள்ளும் சின்ன பையன் ஹாஜா இவர்களை அழைத்து பள்ளிக்கு எதிராக உள்ள கேசை வாபெஸ் பெற சொல்லுங்க அப்புறம் மார்க்கம் அரசியல் எல்லாம் பேசலாம்
ReplyDelete