அதிராம்பட்டினம், நவம்பர் 11
தஞ்சை மாவட்டம், அதிரை புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்தவர் அஹமது நாச்சியா ( வயது 60 ) இவருடைய மகள் நபீனா பேகம் ( வயது 35 ) இவரது மகன் அஸ்கர் ( வயது 22 ). இவர்கள் 3 பேரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த மழையால் அஹமது நாச்சியாவின் வீட்டு சுவர் முழுவதும் நனைந்திருந்தது. அவரது வீடு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு களிமண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீடு ஆகும்.
இன்று காலை 7 மணிக்கு அஹமது நாச்சியாவின் வீட்டின் உட்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நபீனா பேகம் இடிபாடுகளுக்குள் சிக்கினர். சுவர் இடிந்து விழுந்த சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்த அஹமது நாச்சியா கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். இதையடுத்து இடிபாடுகள் அகற்றப்பட்டு நபீனா பேகத்தை பத்திரமாக மீட்டனர். இதில் நபீனா பேகத்திற்கு இடுப்பு மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்த ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண்மொழி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுவர் இடிந்து விழுந்த போது வீட்டின் மற்றொரு பகுதியில் படுத்திருந்ததால் அஹமது நாச்சியா, அஸ்கர் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.