நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர்மன்ற பெருந்தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு தலைமை வகித்தார். தேசிய கராத்தே பயிற்சியாளர் ரென்சி சி.தயாளன், பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் எஸ். மயில்வாகணன், கராத்தே தலைமை பயிற்சியாளர் என். நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் முஹம்மது பவ்ஜான் அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் பெற்றார். இவர் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் பேரன் ஆவார்.








Mashaallah ...Go ahead........ carry on much and more ..........
ReplyDelete