இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கடும் காய்ச்சலால் அவதிபட்டார். உடனே இதே பகுதியில் இயங்கும் தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைக்காக சென்றார். மருத்துவரின் அறிவுரையின் பேரில் இரத்தம் பரிசோதனை செய்துகொண்டார். அதில் இவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேவையான மருத்துவ சிகிச்சை இவருக்கு வழங்கப்பட்டன. தற்போது வீட்டில் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
டெங்கு காய்ச்சலிலிருந்து தான் மீண்டு வந்திருப்பது குறித்து அதிரை ஆர்வலர் தமீமுல் அன்சாரி நம்மிடம் கூறுகையில்...
'கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் வலி, தலை வலி, தோள்பட்டை, முதுகு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் வலி. உடனே அருகில் உள்ள மருத்துவர் ஹாஜா முகைதீன் அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்றேன். மருத்துவர் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினர். இரத்த பரிசோதனை முடிவில் எனக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்கான மருத்துவ சிகிச்சை எனக்கு வழங்கினார். மேலும் முழு ஓய்வில் இருக்கவும், நீர்ஆதாரங்களை அதிகளவில் பருகவும் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து இளநீர், மாதுளை ஜூஸ், சாதுக்குடி ஜூஸ் உள்ளிட்டவற்றை அதிகளவில் பருகினேன். மருத்துவர் கூறிய அறிவுரையை முழுவதையும் விடாமல் பின்பற்றினேன். டெங்கு பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. காலதாமதமில்லாமல் மிகச்சரியான நேரத்தில் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சையால் என்னால் டெங்கு பாதிப்பிலிருந்து மீள முடிந்தது' என்றார்.
டெங்கு காய்ச்சலால் பச்சிளங் குழந்தைகள் இறப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது அதனை தடுக்க டெங்கு பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு தேவை, ப்ளக்ஸ் போர்டு அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் அதன் ஒரு பகுதியில் அரசு; பிளக்ஸ் போர்டில் விளம்பரம் செய்ய வேண்டும். அரசு மருத்துவ மனையில் டெங்கு மருந்து இல்லை போதிய வசதியும் இல்லை என்பதை சமீபத்தில் எடுக்கப் பட்ட ஆய்வில் தெருகிரது. தனியார் மருத்துவமனையும் இதான் நேரமென்று கருதி அதிகமாக பொதுமக்களிடம் பணத்தை கறக்கிறார்கள்.
ReplyDeleteடெங்கு கொசு, 21 நாட்கள் உயிர் வாழ்கிறது. ஒருநாள் விட்டு ஒரு நாளைக்கு, 600 முதல் 800 முட்டையிடுகின்றன இதனை கட்டுபடுத்த ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.