இதைதொடர்ந்து தமீமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியினர் தங்கள் பலத்தை நிருபிக்க தஞ்சையில் கடந்த [11-10-2015 ] அன்று போட்டி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினர். இதில் மனித நேய மக்கள் கட்சியின் சட்ட விதி 13–ன் படி தலைமை நிர்வாக குழு ஒப்புதலோடு பொது செயலாளர் தான் தலைமை பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரம் பெற்றவர் என அறிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தவர் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிற அதிரையில் இயங்கி வரும் மனிதநேய மக்கள் கட்சியினர் கடந்த [10-10-2015 ] அன்று பொதுக்குழுவை கூட்டினர். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, அப்துல் சமது, ரஹ்மத்துல்லாஹ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து இவர்கள் தலைமையின் கீழ் செயல்பட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்த நிலையில் தமீமுன் அன்சாரி ஆதரவாளர் அதிரை சர்புதீன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் விழிப்புணர்வு கூட்டம் அதிரை பேரூந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மண்டபத்தில் இன்று 08-11-2015 இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமீமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் எம். அஹமது கபீர் தலைமை வகித்தார். தமீமுன் அன்சாரி ஆதரவாளர் அதிரை சரபுதீன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி 'இந்தியா அரசியலும் சிறுபான்மை மக்களின் நிலையும்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். சுமார் 1 மணி நேரம் நீடித்த பேச்சில் 'மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டியலிட்டு பேசினார்.
இதையடுத்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இதில் அதிரை அன்வர், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம், சமூக ஆர்வலர் ஜமால் முஹம்மது, இணையதள செய்தியாளர்கள் அஸ்ரப், முஹம்மது சாலிஹ், நூருல் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் மனிதநேய கட்சி தொடர்பாக சமீப காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்து பேசினார்.
முன்னதாக மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் எம்.ராவுத்தர்ஷா, சிறிது நேரம் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிவில் நாச்சிகுளம் தாஜுதீன் நன்றி கூறினார். பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்த இந்த கூட்டத்தில் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். கொட்டும் மழையிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
இவங்களெல்லாம் என்னத்த சாதிக்கப் போறாங்களாம்.. ஓட்டை பிரித்து,. சமுதாயத்தை கூறு போட்டு தலைமை பதவி மட்டுமே மிஞ்சும்... நாட்டின் நிலையிலும் சமுதாயத்தின் நிலையிலும் உண்மையிலேயே கவலை இருந்தால் இப்படி கட்சியை பிரித்து மக்களை முட்டாள்களாக்குவார்களா? இவர்களுக்கு ஆதரவு அளிப்பதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும்.. ஜவாஹிருல்லாவாக இருந்தாலும் சரி,,, தமிம் அன்சாரியாக இருந்தாலும் சரி.. ஒற்றுமையுடன் வந்தால் ஊரில் இடமுண்டு இல்லையேல் வராதீர்கள் என ஊர் எல்லையை விட்டு துறத்த வேண்டும் இது நாமூரில் மட்டுமல்ல சமுதாயம் அதிகம் உள்ள் ஊர்களில் இதனை செய்ய வேண்டும். செய்வார்களா? செய்வார்களா? அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் ..
ReplyDelete