.

Pages

Friday, December 9, 2016

சவூதி ஜித்தாவில் 39 ஆண்டுகள் பணியாற்றி தாயகம் திரும்பும் அதிரையர் கெளரவிப்பு !

அதிரை நியூஸ்: சவூதி, டிச-09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (வயது 70). இவர் சவூதி அரேபியா நாட்டில் கடந்த 39 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இக்காலக்கட்டங்களில் பல்வேறு பொதுச்சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். விமான நிலையத்தில் பணியாற்றிய போது புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தன்னார்வலராக பல்வேறு உதவிப்பணியை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும், உணவு ஏற்பாடு செய்துகொடுத்தல், லக்கேஜ் எடுத்து செல்ல உதவி, சிம் கார்டு உதவி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் சவூதி ஜித்தாவில் செயல்பட்டு வரும் அதிரை இளைஞர் மேம்பாட்டு சங்கம் ( அய்டா ) சேவை அமைப்பின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து இவரது 39 ஆண்டுகால சிறப்பான சேவையைப் பாராட்டி அய்டா சேவை அமைப்பின் சார்பில் அவ்வமைப்பின் தலைவர் ராஃபியா அவர்கள் கேடயம் வழங்கி கெளரவித்தார். அருகில் அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.