அதிராம்பட்டினத்தில் வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி இருந்த வாகனங்கள் மீது காங்கிரட் கல்லைப் போட்டு கண்ணாடிகள் உடைப்பு. மர்ம நபர்கள் நள்ளிரவில் அட்டுழியத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளித் தெருவை சேர்ந்தவர்கள் ரியாஸ் அகமது, அஜ்மல்கான், முஹம்மது புஹாரி, பஷீர் அகமது. இவர்கள் அனைவரும் அருகே அருகே வசித்து வருகின்றனர். கீழத்தெருவை சேர்ந்தவர் ஷஃபாத் அகமது, ஹாஜா நகரை சேர்ந்தவர் அப்துல் சமது. இவர்கள் 6 பேரும் தங்களுக்கு சொந்தமான வாகனங்களை வழக்கம்போல் அவரவர் வீட்டின் வாசல் முன்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனங்கள் மீது காங்கிரட் கல்லைப்போட்டு சேதப்படுத்தி உள்ளனர். இதில் ஆட்டோ, அம்பாஸ்டர் கார், மாருதி கார், ஆமினி வேன் உட்பட 6 வாகனங்களின் முகப்பு மற்றும் பின்புறமுள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமாகியது. இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் வாகனங்கள் வைத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். அதிராம்பட்டினம் பகுதிகளில் நள்ளிரவில் அட்டுழியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஒவ்வொரு முக்கியமான பகுதியில் CCTV கேமரா பொருத்தவேண்டும். காவல்துறைக்கே காவல் தேவைப்படும் போது காருக்கு எப்படி கிடைக்கும. நம்மவூரு முக்கியஸ்தர்கள் எல்லாம் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை பண்ணினார்கள் விளைவு இதுதானா? அதில் சமூக ஆர்வலர்கள் சில யோசனை வைத்தார்களே., அதன் மீது கவனம் செலுத்தினார்களா?பிரச்னை வரும்போது கொடுக்கிறோம்; தீர்ந்த பிறகு மறக்கிறோம். மறதியே காரணம்.
ReplyDeleteஇதை யாரு செய்தார்கள் என்று கண்டு பிடுத்து ஆக வேண்டும் .
ReplyDeleteஇவளோ தைரியமாக செய்தவர்கள் நாளை எது வேண்ணா செய்யலாம்
இவர்களை சும்மா விட கூடாது ,ஏன் இந்த செயல் என்று தெரிய வேண்டும்.
முடித்த வரை வீடுகளில் கேமரா பொருத்துங்கள் ,கூர்க்கா நியமன செய்ய
முயற்சிகள் எடுப்போம்.
இந்த கண்ணாடி உடைப்புக்கு பின்னால் அரசியல் இருப்பதுபோல் தோனுகிறது.
ReplyDelete