தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராமங்களின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையுடன், குடும்ப அட்டை தலைவரின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள எண் இணைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.
இதில் ஏரிப்புறக்கரை வருவாய் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் 3,600 பேர் உள்ளனர். இதில் 1800 பேர் மட்டுமே ஆதார் எண் இணைப்பதற்கு தேவையான தகவல்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்துள்ளனர். மீதமுள்ள 1800 பேர் இன்னும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையுடன் காலக்கெடு முடிவடைய உள்ளதால், அதிராம்பட்டினம் மற்றும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராமங்களின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் தங்களது குடும்ப அட்டை நகலுடன், குடும்ப தலைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்ப தலைவரின் அலைப்பேசி எண் ஆகியவற்றை குடும்ப அட்டை நகலில் எழுதி இன்று மாலைக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆதார் எண் வந்தாலும் வந்தது அதே நேரத்தில் குழப்பமும் வந்தது. இப்போ ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என்கிறார்கள் அதே நேரத்தில் வாங்கி கணக்கு துவங்க தேவையில்லை என்றும் சொல்லுகிறார்கள் முன்பு தேவை இப்போ இல்லை. மக்களை குழப்ப புது புது யோசனை கொடுக்குறாங்க. தாங்க முடியல
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete