அதிரை நியூஸ்: பிப்-05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செக்கடித்தெருவை சேர்ந்தவர் எஸ்.எம்.எஸ் அஷரப் அலி. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகன் முஹம்மது ஆஷிக் (வயது 17). இவர் பேர் பீல்ட் பகுதி பள்ளியில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
பேர் பீல்ட்-சூசன்- கார்டிலியா ரோட்டரி கிளப் சார்பில் சாதனை நிகழ்த்திய 21 இளம் மாணவர்களுக்கான சேவை விருது வழங்கி கெளரவிக்கும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது ஆஷிக் மாணவருக்கு சிறந்த 'நன்னடத்தை விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்ற மாணவரை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நன்னடத்தை விருது பெற்றது குறித்து மாணவர் முஹம்மது ஆஷிக் கூறுகையில்;
நான் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் எனது பெற்றோருடன் தங்கிருந்து கல்வி பயின்று வருகிறேன். நன்னடத்தை விருது பெற்றது எனக்கும், எனது பெற்றோருக்கு, நான் பிறந்த மண்ணிற்கு சிறப்பை தருகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.... தற்போது பொலிட்டிகல் சயின்ஸ் பாடம் படித்து வருகிறேன். எதிர்காலத்தில் ஏரோனாட்டிக்கல்ஸ் இன்ஜினியரிங் படிக்க திட்டமிட்டுள்ளேன்' என்றார்.






No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.