தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுப்ரமணிகோவில் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் நாகராஜ் (வயது 59). அதிராம்பட்டினம் பகுதிகளில் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் உடல் நலம் பாதிப்படைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். நாகராஜ் வசித்த பகுதியில் பிளிச்சிங் பவுடர், பினாயில் தெளித்தனர். மேலும் இப்பகுதியினரை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்கள்.

RIP
ReplyDelete