தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் தலைமையிலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், உணவுத்துறை செயலாளர் மற்றும் தஞ்சாவூர் மண்டல கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் இன்று (22.4.2017) நடைபெற்றது.
வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வு செய்து பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வறட்சி நிவாரணம் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தேவையான முன்னேற்பாடு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. உணவுத் துறை செயலர் அவர்களின் ஆலோசனையின் படி தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ரூ.10 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 906 கிராமங்களில் 825 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்படலாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளது. வருகின்ற மே மற்றும் ஜீன் ஆகிய இரண்டு மாதம் போதிய அளவு குடிநீர் பொது மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னேற்பாடுகள் பணிகள் செய்து கொள்ள வேண்டும். புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான இடங்களையும், நீர் மட்டம் குறைந்துள்ள நீரேற்று நிலையங்களில் அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தி உடனடியாக தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் சரி செய்வதற்கு ஏதுவாக மாற்று ஏற்பாடுகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்கள் வாரியாகவும், கலந்தாய்வு மேற்கொண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் முன்னேற்பாடு பணிகள் செய்யவும், வருங்காலங்களில் குடிநீர் தேவைக்கு தேவையான இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தேர்வு செய்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைந்து போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. வறட்சி காலங்களில் தென்னை மரங்கள் பட்டு போகா வண்ணம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தென்னை மரங்களை சுற்றி தென்னை மட்டைகள் பயன்படுத்தி ஈரப்பதத்தினை நிலைநிறுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், சொட்டு நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைதுறை அலுவலர்களுக்கும்ää தோட்டக் கலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
கால்நடை துறையினர் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம், உலர் தீவனம் போன்றவை இருப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கால்நடை துறை மூலம் தேவையான தீவனங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மின் வாரியம் குடிநீர் விநியோகத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தினை முறைப்படுத்தி வழங்க வேண்டும். வருங்காலங்களில் தேவைப்படும் இடங்களில் மின்மாற்றி (வுசயளெகழசஅநச) கையிருப்பில் வைத்து, மின் தடை ஏற்படா வண்ணம் பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
கூட்டுறவு துறை மூலம் விவசாயிகள் பெற்ற கடன் வசூலிப்பதற்கு டிசம்பர் மாதம் வரை எந்தவித நிர்ப்பந்தம் செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு புதிய விவசாயக் கடன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களுக்கும் கிடைப்பதற்கு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தஞ்சாவ10ர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், ஒருங்கிணைந்த மாவட்ட பால்வள கூட்டுறவுத் தலைவர் ஆர்.காந்தி, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் ஒன்றியத் தலைவர் சூரியநாராயணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சோழபுரம் அறிவழகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.