.

Pages

Wednesday, April 26, 2017

அதிரை அருகே குடிநீரை உறிஞ்சி தென்னந்தோப்புகளுக்கு பாய்ச்சிய மின்மோட்டார்கள் பறிமுதல் !

அதிராம்பட்டினம், ஏப்-26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள நரசிங்கபுரம் ஊராட்சி வாழைக்கொல்லை பகுதியில் சிலர் பிரதான குடிநீர் குழாயிலிருந்து மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி தென்னை தோப்புகளுக்கு பயன்படுத்துவதாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி ( வட்டாரம் ), அறிவானந்தம் ( ஊராட்சிகள் ) ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது 5 இடங்களில் குடிநீர் குழாயிலிருந்து சட்டவிரோதமாக மின்மோட்டாரைக் கொண்டு குடிநீரை உறிஞ்சி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 5 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்து, அந்த குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர். இதேபோல் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என ஒன்றிய அலுவலர்கள் எச்சரித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.