.

Pages

Monday, April 24, 2017

சவூதியில் மந்திரிசபையில் மாற்றம்; மீண்டும் போனஸ் அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஏப்-23
இரு புனிதப் பள்ளிகளின் பாதுகாவலர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் அவர்கள் சனிக்கிழமை மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ததுடன் நிறுத்தப்பட்டிருந்த போனஸ் மற்றும் இதர நிதிச்சலுகைகளை மீண்டும் வழங்குதல் உட்பட பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி, அனைத்து விதமான நிதிச்சலுகைகள், போனஸ்கள் யாவும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் மீண்டும் வழங்கவும், ஏமன் போர்முனையில் பணியாற்றும் வீரர்கள் உட்பட அனைவருக்கும் சிறப்பு நிதியாக 2 மாத சம்பளத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மந்திரிசபையில் சில மாற்றங்கள் செய்தும், புதிய அமைச்சர் மற்றும் 5 துணை அமைச்சர்களை நியமனம் செய்தும், பிரதேச கவர்னர்னகள் என அழைக்கப்படும் பல அமீர்கள், துணை அமீர்களை மாற்றியும், அமெரிக்காவுக்கான புதிய தூதரை நியமித்தும், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் இதர நிர்வாகிகளை மாற்றியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், புனிதமிகு ரமலான் மாதம் துவங்கு முன்னர் பல்கலைகழகங்கள் உட்பட அனைத்துவகை கல்வித்தேர்வுகளையும் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கவும், ஹஜ் உம்ரா விசா கட்டணங்கள் ரத்து செய்யப்படவும் வழிகாண மன்னர் முன்வர வேண்டும் என பிரார்த்திப்போம்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.