தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் 2017 -18 ஆம் ஆண்டிற்கு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழைவு கட்டணம், பேருந்து நிலைய கழிப்பிட கட்டணம், சாலையோர அங்காடி கட்டணம், ஆடு அடிக்கும் தொட்டி கட்டணம் வரும் 01.05.2017 முதல் 31.03.2018 வரை வசூலிக்க உரிமம் வழங்குவது தொடர்பாக எதிர்வரும் மே-3 ந்தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் மறுஏலம்-மறுடெண்டர் விட அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதில் பங்குபெற ஆர்வம் உள்ளவர்கள் பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கீழ்காணும் டேவணித் தொகையை வரும் மே. 3 ந்தேதி காலை 10 மணிக்குள் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சாலையோர அங்காடி கட்டணம் வசூலிக்க ( டேவணித் தொகை ரூ. 250,000 )
பேருந்துகள் நுழைவு கட்டணம் வசூலிக்க ( டேவணித் தொகை ரூ.100,000 )
பேருந்து நிலைய கழிப்பிட கட்டணம் ( டேவணித் தொகை ரூ.100,000 )
ஆடு அடிக்கும் தொட்டி கட்டணம் ( டேவணித் தொகை ரூ.20,000 )
மேலதிக தகவல் பெற மற்றும் தொடர்புக்கு அதிரை பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையைக் காணவும்.
வழக்கமா ஏலத்தை எடுப்போர் தான் இப்போது எடுப்பார் என தெரிகிறது., நம்மக்கள் இதன் மீது விழிப்புணர்வு கிடையாது; முயற்சி பண்ணிபாருக்க அதன் அருமை தெரியலாம்.
ReplyDelete