.

Pages

Wednesday, April 26, 2017

ஷார்ஜாவில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை !

அதிரை நியூஸ்: ஏப்-26
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குவைத்திலிருந்து விடுமுறையில் குறுகிய சுற்றுலா வந்த தம்பதியருக்கு 22 வாரத்திலேயே அதாவது 6 வது மாதத்திலேயே குறைமாத குழந்தையாக 'நூரா' எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் குழந்தை ஷார்ஜா ஜூலைகா மருத்துவமனையில் பிறந்தது.

நூரா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி பிறக்கும் 1 லிட்டர் தண்ணீரின் எடையை விட குறைவாக சுமார் 600 கிராம் மட்டுமே இருந்தது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையின் விளைவாக தற்போது 1.5 கிலோ எடையுடன் வளர்ந்துள்ளாள் அந்த அழகிய அதிசய பிஞ்சு.

உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையின் படி, இவ்வாறாக பிறக்கும் குறைமாத குழந்தைகளில் 75 சதவிகிதம் மரணத்தை தழுவிவிடும் நிலையில் நூரா அல்லாஹ்வின் உதவியால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.

விரைவில் பெற்றோருடன் நூரா தாய் நாடான குவைத் திரும்பவுள்ள நிலையில், அவளது பெற்றோர்கள் அமீரகத்திற்கு வந்ததே மிகக்குறுகிய கால விசிட்டில் தான் ஆனால் தற்போது நீண்ட கட்டாய விடுமுறையை அனுபவித்தவர்களாக திரும்பவுள்ளனர். இதைத் தான் நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைப்பான் என்பதோ!

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.