அதிரை நியூஸ்: ஏப்-19
ராஸ் அல் கைமா பொதுப்பணித்துறையின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குப்பைகளை சகட்டுமேனிக்கு வீதியில் எறிந்த சுமார் 1,100 பேர் மீது அபராதம் விதித்துள்ளனர். இந்த சோதனைகள் அல் ரம்ஸ், அல் முவைரீத் மற்றும் நகரின் தென்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நகரின் தூய்மை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பொது சாலைகள், பூங்காக்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற 9 இடங்களில் குப்பைகள் அதிகம் எறியப்படுவதாகவும், இத்தகைய செயலில் ஈடுபடுவோர் குறித்து தெரிவிக்க 8008118 என்ற இலவச எண்ணை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜெபல் அல் ஜைஸ் மற்றும் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது உடனடியாக 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் விரைவில் ராஸ் அல் கைமாவில் 38 இடங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான மின்சக்தி சூரியஒளி தகடுகள் மூலம் பெறப்படும் என்றும் ராஸ் அல் கைமா போக்குவரத்துத் துறையின் துணை இயக்குனர் யூசுப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.