.

Pages

Monday, April 17, 2017

அமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் மட்டுமே !

அதிரை நியூஸ்: ஏப்-17
அமீரகத்தில் புதிய போக்குவரத்து சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிதாக லைசென்ஸ் எடுக்கும் அனைத்து டிரைவர்களுக்கும் 2 வருட லைசென்ஸ் மட்டுமே வழங்கப்படும்.

அமீரகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறையும், வெளிநாட்டவர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறையும் புதுப்பிக்கப்படும் என்றாலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி லைசென்ஸ் பெற்றவர்களுக்கு மட்டும் அடுத்த புதுப்பித்தல் தேதி வரை பழைய நடைமுறையே செல்லும்.

அமீரக தேசிய போக்குவரத்து சபை (Federal Traffic Council) வழங்கும் அறிவுரைக்கேற்ப குறிப்பிட்ட சில வகைகளின் வருபவர்களுக்கு மட்டும் ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கோ லைசென்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் 'அந்த குறிப்பிட்ட வகையினர் யார்' என்பது குறித்து செய்தித்தாள்களில் விபரமில்லை.

அதேபோல் நாள்பட்ட தீராத வியாதியஸ்தர்கள், வலிப்பு நோய், கடும் நீரிழிவு உள்ளவர்களுக்கும் லைசென்ஸ் முற்றிலும் வழங்கப்படாது. மேலும் சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள கணிணிவழித் தொடர்பு மூலம் இத்தகைய டிரைவர்களின் உடல்நலம் குறித்த தகவல்கள் பெறப்படும்.

குடியிருப்புப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் 40 km/ph வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்கள் அதிக சப்தம் எழுப்பவும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களின் அருகில் செல்லும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கு என தனி தடம் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பாலைவன பைக் உட்பட அனைத்தும் கட்டாய பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய வாகனங்களை மணல் மற்றும் பாலைவெளிகளில் மட்டுமே இயக்க வேண்டும்
.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே வாகனங்களில் முன்பக்கம் அமரவும், கட்டாயம் பாதுகாப்பு பெல்ட் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களின் முன்பக்கம் அமரும் பெரியவர்களோ, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளோ பாதுகாப்பு பெல்ட் அணியத் தவறினால் டிரைவர் மீது 400 திர்ஹம் அபராதமும் 4 கரும்புள்ளிகளும் விதிக்கப்படும் என்பது போன்ற பல புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.