அதிரை நியூஸ்: ஏப்-17
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் வாழும் தம்பதியர் ஒருவர் குழந்தைபேருக்காக IVF தொழிற்நுட்ப சோதனை செய்யும் வசதியுள்ள மருத்துவமனை ஒன்றின் உதவியை நாடினர். ஆனால் அவர்களுக்கு செய்யப்பட்ட மரபணு சோதனையின் விளைவாக பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் பயின்றவர்கள், விரும்பி திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே நேரத்தில் அமைந்திருந்த பிறந்த தேதி எதார்த்தமாக அமைந்துள்ளதாகவே இதுவரை நம்பி வந்துள்ளனர்.
இவர்களுடைய மரபணு சோதனை முடிவின் விளைவாக இருவரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரியாக இருக்கலாம் என முதலில் கருதிய டாக்டர்கள் இவர்களுடைய 1984 ஆண்டின் பிறப்புச் சான்றிதழை சரிபார்த்து இவர்கள் ஒன்றாய் பிறந்த இரட்டையர்களே என உறுதியான முடிவுக்கு வந்தனர்.
முதலில் நம்ப மறுத்த தம்பதியர் தற்போது தங்களின் அடுத்த கட்ட முடிவிற்காக ஆலோசித்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர் கார் விபத்து ஒன்றில் பலியானதால் இருவேறு வளர்ப்பு பெற்றோர்களால் இவர்கள் இரட்டையர்கள் என சொல்லப்படாமல் வளர்த்ததே இந்த பெரும் குழப்பத்திற்கும் சோகத்திற்கும் காரணமாக அமைந்தது.
Source: Evening Standard / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.