அதிராம்பட்டினம், ஏப்-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை அப்புறபடுத்த பேரூராட்சி சார்பில் வாங்கப்பட்ட மினி டிப்பர் லாரி 49 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை பேரூராட்சிக்கு சொந்தமான 2 டிராக்டர் மற்றும் 1 வாடகை டிராக்டர் வாகனங்களில் அப்புறப்படுத்தப்படுகிறது.
அதிரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபுறமிருந்தாலும், டிராக்டர் வாகனங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் குப்பைகளை முழுமையாக அகற்றுவதில் பெரும் சிரமம்
இருந்து வந்தது. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துவரும் நிலையில் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த கூடுதல் வாகனங்கள் வாங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு, 2015-16 நபார்டு நிதி உதவியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2015-16 கீழ் ரூ. 12.50 லட்சம் மதிப்பில் புதிதாக மினி டிப்பர் லாரி வாங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, புதிய மினி டிப்பர் லாரி வாகனம் கடந்த மார்ச் மாதம் 11 ந் தேதி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்த வாகனத்தை பயன்படுத்தாமல் பேரூராட்சி அலுவலக வரண்டாவில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கடும் அதிருப்தியடைய வைத்தது.
குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் காணப்பட்டன. இக்குப்பைகளை அகற்ற மினி டிப்பர் லாரி வாகனத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கோரிக்கை பிரபல தினமணி நாளிதழில் சென்ற ஏப்.15 ந் தேதி பிரதான செய்தியாக வெளிவந்தது.
இந்நிலையில், அதிரை பேரூராட்சி அலுவலக வரண்டாவில் நிறுத்தப்பட்டு இருந்த மினி டிப்பர் லாரி வாகனம் 49 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அதிரை பேரூராட்சி பகுதிகளில் தேங்கி காணப்பட்ட குப்பைகளை அள்ளிச்சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.