அதிராம்பட்டினம் ஏப்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை அதிராம்பட்டினம் கடைவீதிக்கு வெயிலுக்கு இதமான வெள்ளரிப் பழங்கள் கூடை, கூடையாக விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.
இந்தப் பழங்கள் பக்கத்திலுள்ள மங்கனங்காடு கிராமத்திலிருந்து அதிரை கடைத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பழம் ரூ.20-க்கும், பெரிய பழம் ரூ.30-க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து வெள்ளரிப்பழ சாகுபடியாளரும், விற்பனையாளருமான மங்கனங்காடு சுப்பிரமணியன் கூறியது:
'எனது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 1 ஏக்கர் நிலத்தில் வெள்ளரிப்பழங்களை சாகுபடி செய்கிறேன். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதிக்கு வழக்கம் போல் வெள்ளரிப் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். தினமும் 150 பழங்கள் வரை விற்பனையாகிறது.
சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 3 மாதங்கள் மட்டுமே விளையக் கூடிய வெள்ளரிப் பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. வெயிலுக்கு இதம் தரும் இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம். குறிப்பாக உடல் பருமனை குறைக்க உதவும்.
3 மாதங்கள் மட்டுமே இந்த பழங்கள் கிடைக்கும் என்பதால், இப்பழத்துக்கு எப்போதும் கிராக்கி அதிகம். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அம்மை, வியர்க்குரு, வியர்வை கொப்பளங்கள் போன்றவற்றை தடுக்கும் வல்லமை கொண்டது.
வெள்ளரிப் பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெள்ளரிப்பழச்சாறு குடித்தால் தாகம் தணியும். இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் அதிரை பகுதியில் பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.