.

Pages

Saturday, April 22, 2017

கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த பிரான்ஸ் கலைஞர் !

அதிரை நியூஸ்: ஏப்-22
ஆப்ரஹாம் பொயின்செவல் என்ற 44 வயது மனிதருக்கு எதையாவது வித்தியாசமாக செய்வதில் ஆர்வம் அதிகம். இதற்கு முன் ஒரு பாறைக்குள் 1 வாரம் வாழ்ந்தது, கரடி பொம்மைக்குள் 13 நாட்கள் புகுந்து கொண்டு புழு, பூச்சிகளை மட்டும் தின்று வாழ்ந்தது, ரோன் ஆற்றில் மிகப்பெரிய கண்ணாடி பாட்டிலினுள் அடைத்துக் கொண்டு மிதந்து சென்றது போன்ற பல வித்தியாசமான செயல்களை செய்துள்ளார்.

தற்போது, பாரீஸ் நகரில் அமைந்துள்ள 'பேலஸ் டி டோக்யோ' (Palais De Tokyo Museum in Paris) எனும் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட, 37 டிகிரி தட்பவெப்பம் நிலவும் ஒரு கண்ணாடி அறையினுள் இதற்கென வடிவமைக்கப்பட்ட 'வெப்ப போர்வை' (Incubating Blanket) மேல் அமர்ந்த நிலையில் உறங்கியும் 10 கோழி முட்டைகளை கடந்த மார்ச் 29 ஆம் தேதி முதல் அடைகாத்த வந்ததன் விளைவாக 10 முட்டையின் முதலாவது முட்டை குஞ்சு பொறித்துள்ளது, எஞ்சிய முட்டைகளும் குஞ்சு பொறிக்கும் வரை அவர் அங்கேயே இருப்பார்.

அடைகாக்கும் போது உண்பது, கழிப்பது எல்லாம் அதில் அமர்ந்தவரே அதில் செய்யப்பட்டிருந்த சிறப்பு வசதிகள் மூலம் நிறைவு செய்து கொண்டார். தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே போர்வை போர்த்தப்பட்ட முட்டை மேலிருந்து எழுந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். இவருடைய இந்த அடைகாத்தல் நிகழ்ச்சி கடந்த 3 வாரங்களாக யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

இவருடைய தற்போதைய மற்றும் முந்தைய சாதனைகளின் புகைப்படங்களை காண கீழ்க்காணும் தளத்திற்குள் சென்று பார்க்கவும்.

http://www.standard.co.uk/news/world/artist-abraham-poincheval-becomes-chicken-for-threeweek-egg-incubation-performance-a3503091.html

Source: Web Report / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.