.

Pages

Sunday, April 23, 2017

காணாமல் போன அதிரை வாலிபர் சென்னையில் மீட்பு !

அதிராம்பட்டினம், ஏப்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜிக் அகமது. சுற்று மனநிலை பாதிக்கப்பட்டு சென்னை அருகே உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

மருத்துவ கிச்சைக்காக இவரது உறவினர் பைசல் அகமது கடந்த சிலவாரங்களுக்கு முன்பு காப்பகத்திலிருந்து ராஜிக் அகமதை அழைத்துச்சென்று பெரியமேட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது மண்ணடி பகுதிக்கு தன்னை அழைத்துச்செல்லும் படி கூறி வந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்-7 ந் தேதி முதல் திடீரென மாயமானார்.

இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். இவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்தனர். இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர், காரப்பாக்கம் பள்ளிவாசல் இமாம், நிர்வாகிகள் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை பத்திரமாக மீட்டு வந்தனர். இளைஞரின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் பள்ளிவாசல் இமாம், நிர்வாகிகள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.