.

Pages

Monday, April 17, 2017

ஷார்ஜாவில் நடந்த இலவச மருத்துவ முகாம் !

அதிரை நியூஸ்: ஏப்-17
ஷார்ஜா : ஷார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் அல் நஜ்மா அல் பரிதா தொழிலாளர் முகாமில் 14.04.2017 வெள்ளிக்கிழமை தமிழ்ப் புத்தாண்டையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஷார்ஜா தும்பே மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் கொண்ட குழுவினர் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், பொது மருத்துவம், பல் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி மருத்துவமனைக்கு வருமாறு கூறினர். அங்கு அவர்களுக்கு பெரும்பாலான சிகிச்சைகள் இலவசமாகவே வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மருத்துவ முகாமை சிறப்புடன் நடத்திய டாக்டர்களுக்கு அல் நஜ்மா அல் பரிதா நிறுவன அதிகாரி ஜமால் ஹாஜா பூங்கொத்து வழங்கி கௌரவித்தார். அப்போது மேலாளர் அபுதாஹிர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், சதாம், கபூர், கீழை ஹமீது யாசின், திருச்சி முகம்மது இக்பால், பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், சென்னை தமீம், வழுதூர் சபீக் அகமது உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

பிளாக் துலிப் பிளவர்ஸ், பிரான் ஜூஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாம் நடப்பதற்கு ஆதரவு அளித்திருந்தன.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.