.

Pages

Saturday, April 15, 2017

பஞ்சத்தில் வாடும் சோமாலியா நாட்டில் புதிய அணை: அமீரக ஆட்சியாளரின் மனிதநேயம் !

அதிரை நியூஸ்: ஏப்-15
அமீரகம் 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழும் ஆண்டாக' (Year of Giving) அறிவித்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சோமாலியாவை கடும் தண்ணீர் வறட்சியும், உணவுப் பஞ்சமும் வாட்டி வருவதால் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணத்தை தழுவியுள்ளனர்.

இதற்கிடையில் பதவி, அதிகாரப்போட்டியில் ஈடுபட்டு வரும் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் 'சுடுகாட்டை' ஆளும் லட்சிய வெறியுடன் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வறட்சி, பசி, பட்டினி, குழுச் சண்டைகளின் பின்னனியில் அமெரிக்க ஏகாத்திபத்தியத்தின் கொடுங்கரங்கள் மறைந்துள்ளது என்ற விஷயத்தை சுக்கு கஷாயம் எனும் மருந்தில்லாமலேயே ஜீரணித்துக் கொண்டு சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்.

அமீரக ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் கீழ் அவர் பெயரிலேயே அமைந்துள்ள அறக்கட்டளையின் சார்பாக, சோமாலி லேண்ட் (Somali land) எனப்படும் பகுதியின் தலைநகரான ஹர்கேஷா (Hargeisa) அருகே மக்கள் மற்றும் மிருகங்களின் குடிநீர் தேவைக்காகவும், எதிர்கால விவசாய பணிகளுக்காகவும் அணை ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. இவ்வணை இன்னும் ஓரிரு நாளில் அதிகாரபூர்வமாக நேரடி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவுள்ளது..

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் நன்கொடை திரட்டல் பிரச்சாரத்தின் மூலம் சுமார் 500 மில்லியன் திர்ஹத்தை திரட்டி சோமாலியா மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உணவு, தண்ணீர், மருந்து போன்ற பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கிடவும் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் அறக்கட்டளை பாடுபட்டு வருகிறது.

தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.