![]() |
கோப்புப்படம் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுயத்தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் அதிரை பைத்துல்மால் அலுவலக மாடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனுபவமிக்க பெண் பயிற்சியாளர் மூலம் தையல்பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடைபெற்று வருகிறது. குறைந்த மாதக்கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அள்ளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் ஓய்வில் உள்ள பெண்கள், பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த மாணவிகள் என பலரும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பாண்டு தையல் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதில் சேர விரும்பும் பெண்கள் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த வாய்ப்பை ஓய்வில் இருக்கும் குடும்ப பெண்கள், விடுமுறையில் உள்ள பள்ளி - கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
04373 241690
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.