.

Pages

Sunday, April 23, 2017

உலகின் மிக குண்டான பெண் சிகிச்சைக்குப் பின் எடையளவில் பாதியாக குறைந்தார் !

அதிரை நியூஸ்: ஏப்-23
சுமார் 500 கிலோ எடையுடன் சிரமப்பட்டு வந்த உலகின் மிக குண்டான பெண்ணாக கருதப்பட்ட எகிப்தின் ஈமான் அப்துல் அதீ மும்பையில் நடைபெற்றுவரும் தொடர் சிகிச்சையின் விளைவாக இதுவரை சுமார் 250 கிலோ எடையை குறைத்துள்ளார், இதன் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை கனவில் கூட நினைத்திராத வகையில் இன்று வீல் சேரில் அமரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

37 வயதான ஈமான் அப்துல் அதீ கடந்த 30 ஆண்டுகளாக உடற்பருமன் காரணமாக படுத்த படுக்கையாக இருந்தவர், கடந்த பிப்ரவரி மாதம் தான் மும்பையில் சிகிச்சை பெறுவதற்காக சிறப்பு விமானத்தில் எகிப்தின் அலெக்ஸான்டிரியா நகரில் இருந்து அழைத்து வரப்பட்டார். கூடவே அவருடன் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை போன்ற நோய்களுடன் இலவச இணைப்பாக பகுதி முடக்கு வாதமும் சேர்ந்து கொண்டு ஆட்டிப்படைத்தது.

இன்னும் சிறிதுகால சிகிச்சைக்குப் பின் அவர் சிடி ஸ்கேனிங் மெஷினில் ஆய்வு செய்ய ஏற்ற வகையில் இளைத்த பிறகு தான் அவருக்கு ஏற்பட்டுள்ள முடக்கு வாதத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் என டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலா தெரிவித்துள்ளார்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.