அதிரை நியூஸ்: ஏப்-18
சவுதியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஊர் பிஷா (Bisha). இங்கு வளர்ந்து வந்த 18 வயது இளைஞன் சயீத் அல் ஹஸாரி என்பவருக்கு தன்னை வளர்த்து வருபவர் தன்னை பெற்ற தாய் அல்ல என்ற உண்மையை தனது ஒன்றுவிட்ட சகோதரன் மூலம் அறிந்த நொடிமுதல் அவனது உலகம் அப்படியே தலைகீழாய் போனது.
சயீதுடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றிய போது ஜீஸான் (Jizan) என்ற ஊரில் பணியமர்த்தப்பட்டார். அங்கு இரண்டாவதாக ஒரு பெண்ணை மணமுடித்தவர் சயீத் பிறந்த ஒரு மாதத்திலேயே குழந்தையை தாயிடமிருந்து வழுக்கட்டாயமாக பிரித்து கொண்டு வந்து தனது முதல் மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியுள்ளார். அதன்பின் அவருக்கு தன் இரண்டாவது மனைவியுடனும் அவரது குடும்பத்தினரிடமும் தொடர்புகள் அற்றுப் போயின என்பதால் தாயை தேடும் தன் மகனுக்கு தெளிவான தகவல்களை தர இயலவில்லை.
பெரும் முயற்சிக்குப் பின் தன் தாயின் சகோதரியின் தொடர்பு எண் கிடைக்கப் பெற்ற சயீத் அதன் மூலம் தன் தாய் ரியாத் மாநகரில் வாழ்ந்து வருவதை அறிந்து கொண்டவருக்கு அதற்கு மேல் தாமதிக்க பெற்றவளின் மேல் உள்ள இரத்த பாசம் இடம் தரவில்லை. பிஷாவிலிருந்து 990 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ரியாத் நகருக்கு தாயை காண படபடக்கும் நெஞ்சுடனும் ஆயிரம் கனவுகளுடன் காரில் புறப்பட்டார் சயீத்.
பாசத்துடன் பறந்த வந்த சயீத் வரும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிக் கொள்ள, அவரை பரிசோதித்து சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் சயீதுடைய பழைய நினைவுகள் அழிந்துவிட்டன. அவர் கோமா நிலையில் உள்ளார் என அறிவித்துள்ளனர்.
தற்போது ஆயிரமாயிரம் சயீத்களும், சயீதுடைய தாய்மார்களும் 'மீண்டும் சயீதுக்கு நினைவு திரும்ப வேண்டும், அவர் தாயுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்' என பிரார்த்தித்து வருகின்றனர். கல்நெஞ்சத் தந்தை வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளதுடன் குற்றவியல் தண்டனையையும் எதிர்பார்த்துள்ளார்.
Source: Gulf News

தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.