அதிரை நியூஸ்: ஏப்-24
நல்ல கவனிங்க மக்களே! குவைத் ஒரு எண்ணெய் வளநாடு மட்டுமல்ல மன்னராட்சி நடைபெறும் நாடும் கூட. பிற
வளைகுடா நாடுகளைப் போலவே அங்கேயும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத பொருளாதார பிரச்சனைகளும் அதை சரி செய்வதற்காக நடைபெறும் முயற்சிகளும் நடைபெற்றே வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் சில்லறை பெட்ரோல் விலையை சுமார் 81 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அந்நாட்டின் எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் அமைப்பான சுப்ரீம் பெட்ரோலியம் கவுன்சில் அனுமதியளித்தது. (அதாவது ராத்திரியோட ராத்திரியா விலையை ஏற்றவில்லை என்பதையும், நடைமுறைக்கு வர இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன என்பதையும் கவனிக்கவும்)
இந்த விலை உயர்வை எதிர்த்து அந்நாட்டு வழக்கறிஞர்கள் பலர் கீழ்நிலை கோர்ட்டுக்கும் பின்பு அப்பீல் கோர்ட்டுக்கும் சென்றனர். அப்பீல் கோர்ட் இந்த விலையேற்றத்திற்கு தடை விதித்ததுடன் இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தடையை எதிர்த்து அரசும், பெட்ரோலிய கவுன்சிலும் குவைத்தின் உச்சநீதி மன்றத்திற்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளன, அதன் தீர்ப்பே இறுதியானது என்றாலும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாட்டின் நீதிமன்றம் ஒன்று மக்களின் பக்கம் நின்று யோசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொஞ்ச நாளைக்கு இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருக்கும்படி அந்த குவைத் நாட்டு நீதிபதியிடம் வேண்டிக் கொள்ள நம்ம நாட்டு சட்டத்தில் வழியேதும் இருக்கா?
நம்ம ஜனநாயக இந்தியாவில், பூனைக்கு யாருங்க மணிக்கட்டுவது என ஏங்குவது மட்டும் தான் தீர்வா?
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.