.

Pages

Monday, April 24, 2017

உலக பூமி தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு !

உலக பூமி தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியோர் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு தோறும் ஏப். 22 ஆம் தேதி உலக பூமி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, கடற்கரைப் பகுதிகளில் பசுமை பாதுகாப்பு வளையம் ( மரம் நடுதல்) ஏற்படுத்துவதோடு, சீமைக் கருவேல மரங்களை நீர் நிலைகளில் இருந்து அகற்றி, தூர் வாரி பாதுகாப்பது, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நெகிழி(பிளாஸ்டிக்) பயன்பாட்டினை அறவே ஒழிப்பது, சூரிய சக்தியை மின் சக்திக்கு மாற்றாக பயன்படுத்துவது, நீர் வளங்களை பாதுகாப்பது மற்றும் நீரினை அளவாக பயன்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி மைய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.