.

Pages

Saturday, April 22, 2017

துபாயில் 4 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு வாகன முடக்க தண்டனை ரத்து !

அதிரை நியூஸ்: ஏப்-22
துபையில் பலவகையான போக்குவரத்துக் குற்றங்களுக்கு தண்டனையாக குறிப்பிட்ட காலங்களுக்கு வாகனங்களை சிறை பிடிக்கும் (Impounding) நடைமுறையுள்ளது. அவற்றிலிருந்து 4 வகையான சிறுகுற்றங்களுக்கு மட்டும் தற்போது நிபந்தனையின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தம் வரும் திங்கட்கிழமை (24.04.2017) முதல் நடைமுறைக்கு வருகிறது.

1. காலாவதியான வாகன அனுமதியுடன் வாகனம் ஓட்டுதல். (Driving with expired car registration)
2. புதுப்பிக்கப்படாத ஓட்டுனர் அனுமதியுடன் வாகனம் ஓட்டுதல். (Driving with expired driving license)
3. பழுதான, குறைபாடுடைய டயர்களுடன் வாகனம் ஓட்டுதல். (Faulty tyre)
4. காலாவதியான வாகன காப்பீட்டுடன் வாகனத்தை இயக்குதல். (Expired Insurance)

ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பழைய போக்குவரத்து குற்றப்பின்புலம் சரிபார்க்கப்பட்டு அவர்களது வாகனங்கள் விடுவிப்பது அல்லது முடக்கத்தை நீடிப்பது (will be released after checking the traffic record of the motorist) குறித்து துபை போக்குவரத்துத் துறை இறுதி முடிவெடுக்கும் என துபை போக்குவரத்து போலீஸ் துறையின் முதன்மை துணை கமான்டர், மேஜர் ஜெனரல் முஹமது சயீஃப் அல் ஜபீன் அறிவித்துள்ளார்.

மேற்காணும் குற்றங்களுக்காக ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் எதிர்வரும் திங்கள் முதல் தேரா அல்லது பர்துபையிலுள்ள போக்குவரத்துத் துறை இயக்குனரகத்தை அணுகினால் அவர்களின் பழைய குற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டு வாகனங்கள் உடன் விடுவிக்கப்படும்.

வாகன முடக்கங்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டே மேற்கொள்ளப்படுகின்றன என்பதால் பொறுப்பற்ற முறையில் வாகனம் இயக்கியோர் (Reckless Drivers), சட்ட விரோத கார் பந்தயங்களில் ஈடுபட்டோர் (Illegal Racing), சிவப்பு விளக்கு நிறுத்தங்களை மீறிச் சென்றோர் (Jumping Red Signals), அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை இயக்கியோர் (Speeding over the speed limit) மீது தண்டனைகள் உறுதி செய்யப்படும்.

இந்த புதிய சலுகை துபையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். கடந்த 2016 ஆம் வருடம் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 1,226 வாகனங்கள் முடக்கப்பட்டன. இந்த வரும் (2017) முதல் காலாண்டில் மட்டும் 281 வாகனங்கள் சிறைபடுத்தப்பட்டுள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.