![]() |
கோப்புப்படம் |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் வறண்டு காணப்படும் பகுதிகளுக்கு மழை வேண்டி எதிர்வரும் மே 2 ந் தேதி செவ்வாய்கிழமை காலை 7 மணியளவில் ஈசிஆர் சாலை பிலால் நகர் கிராணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற உள்ளது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் தொழுகையில் திரளாக கலந்துகொண்டு பங்கேற்குமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இன்பமாக இருக்கும் போது யாரும் இறைவனை தேடுவதில்லை. வாழ்வில் துன்பம் வரும் போது மட்டும் இறைவனை தேடிச் சென்று, 'எனக்கு இதை கொடு, அதை கொடு என, கண்ணீர் விடுகிறோம் . இப்படித் தான் இயற்கை அருமை தெரியாமல் செயற்கை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteநாம் கேட்காமலே இயற்கை நமக்கு வரங்களாக வழங்கிய மரங்களின் மகிமையை போற்றி பாதுகாக்க மறுக்கிறோம். இதன் விளைவு தான் இன்று சுற்று வட்டாரம் முழுவதும் வறட்சியின் காட்சிகளாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் விதைத்த மரங்கள்
மட்டுமே இன்று ஓங்கி வளர்ந்து நிழல் குடை விரித்து நிற்கிறது. புதிதாக வைக்கும் மரக்கன்றுகள் எல்லாம் பாலுக்கு அழுகும் குழந்தை போல, நீருக்காக வெயிலில் வெந்து நொந்து மடிகிறது.,இருக்கும் மரத்தை காட்போம் புதிதாக மரம் நட முயற்சிப்போம்.