தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்விற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (21.4.2017) நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு 29.04.2017 அன்று தாள் 1, 30.04.2017 அன்று தாள் 2 நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தேர்வு நாளான்று தேர்வு மையத்தில் காலை 8.30 மணிக்கு வருகையில் இருக்க வேண்டும். தேர்வு மைய நுழைவாயிலில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை காவலர் சோதனை நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தாள் 1 தேர்வினை 8213 தேர்வாளர்கள் 20 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தாள் 2 தேர்வினை 21,761 தேர்வாளர்கள் 54 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வாளர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு, நீல மற்றும் கருப்பு பேனாக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வேறு எந்த அச்சிடப்பட்ட அல்லது அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்கு வைத்திருக்க கண்காணிப்பாளர்கள் அனுமதி அளிக்கக் கூடாது. கவனமாக 100 சதவிகிதம் கண்காணிக்க வேண்டும். கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது.
தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது சத தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினர் தேர்வு மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். மின்சார வாரியம் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்..
ஒழுங்கீனமாக நடக்கும் தேர்வர்கள் அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன் காவல் துறையின் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.